ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இமேஜை மாற்ற 2 படங்களில் ஹீரோ வேஷம் போட்ட நம்பியார்.. பழைய ரூட்டுக்கே திருப்பி விட்ட எம்ஜிஆர்

இப்போதெல்லாம் ஹீரோக்களே வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு ஏற்ற வில்லன் நடிகர் என்றால் அது எம் என் நம்பியார் மட்டும்தான். வில்லத்தனத்தில் பார்ப்பவர்களை மிரளவிடும் அளவுக்கு இருக்கும் அவருடைய நடிப்பு இன்று வரை திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் அந்த கால மக்கள் எம் ஜி ஆர், சிவாஜியை நிஜ வாழ்க்கையிலும் ஒரிஜினல் ஹீரோவாகவே பார்த்து வந்தனர். அதன் காரணமாகவே அவர்களுக்கு வில்லனாக நடித்த நம்பியாரை அவர்கள் எங்கு பார்த்தாலும் கண்டபடி திட்டி வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் சிறு குழந்தைகள் கூட அவரை நேரில் பார்த்தால் மிரண்டு ஓடிய கதையும் உண்டு.

Also read: டீட்டோடேலராக வாழ்ந்த 5 நடிகர்கள்.. நிஜத்தில் ஹீரோ என நிரூபித்த நம்பியார்

அப்படி ஒரு வில்லத்தனமான இமேஜ் அவருக்கு மக்களிடம் இருந்தது. அதனாலேயே தன்னுடைய இமேஜை மாற்றுவதற்காக நாமளும் ஹீரோவாக நடிப்போம் என்று அவர் இரண்டு படங்களில் நடித்தார். அந்த வகையில் 1952 ஆம் ஆண்டு வெளியான கல்யாணி என்ற திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து திகம்பர சாமியார் என்ற படத்தில் அவர் ஹீரோ வேஷம் போட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த இரண்டு படங்களையும் தயாரித்தது. ஆனால் நீங்கள் என்றும் வில்லன் தான், ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மக்கள் அந்த படங்களுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதனாலேயே அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியது.

Also read: நம்பியார் நடிப்பில் மறக்கமுடியாத 5 படங்கள்.. எம்ஜிஆருக்கு நிகரான வில்லன் இவர்தான்

அதன் பிறகு எம்.ஜி.ஆர் அவரை கூப்பிட்டு நண்பா உனக்கு இந்த ஹீரோ வேஷம் செட்டாகவில்லை. நீ எப்பொழுதுமே நாங்கள் விரும்பிய வில்லன் தான். அதனால் இனிமேல் இதுபோன்ற ரிஸ்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகளே வர ஆரம்பித்திருக்கிறது.

நம்பியாரும் மக்கள் தன்னை எப்படி பார்த்து ரசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வில்லனாகவே பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் அடுத்த தலைமுறைகளுக்கு தாத்தாவாக நடித்தும் அசத்தினார். ஆனாலும் அவர் சிறந்த வில்லன் நடிகராக தான் இப்போது வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

Also read: ஹாலிவுட் படங்களில் மிரள வைத்த 8 தமிழ் நடிகர்கள்.. அங்கேயும் முத்திரை பதித்த எம்என் நம்பியார்

Trending News