வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எதிர்நீச்சலில் ஓவர் திமிரு காட்டும் அப்பத்தா கூட்டணி.. டம்மி பீஸ் ஆன ஆதிரை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் துவங்கப்பட்ட சில மாதத்திலேயே ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாக மாறிவிட்டது. இதில் அனுதினமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காரசாரமான நிகழ்வுகள் அடுத்தடுத்த நிகழ்வதால், நல்ல வரவேற்பு கிடைத்து, டிஆர்பியும் எகிறி கொண்டிருக்கிறது.

இந்த சீரியலின் கதாநாயகி ஜனனி, ஆண் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தப்பித்து. தற்பொழுது தனது சொந்த காலில் நிற்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். வீட்டிற்குள் இருக்கும் மிருகங்களை சமாளிப்பதற்காக இன்னும் பயிற்சி வேண்டும் என்ற நோக்கத்திலும் தனது மனதினை திடப்படுத்திக் கொள்வதற்காகவும் பினான்சியல் எக்ஸிக்யூட்டர் பணியில் சேர்ந்துள்ளார்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

இந்தப் பணியின் மூலம் வெளி உலகத்தில் உள்ளவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கற்றுத் தரும் என்பதற்காக இந்த துறையை தேர்ந்தெடுத்து இருப்பதற்காக ஜனனி கூறுகிறார். இதனை கொண்டாடும் விதமாக வீட்டிற்கு ஸ்வீட் வாங்கி வருகிறார் ஜனனி.

நல்ல வேளையாக வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் வெளியில் சென்று இருப்பதால் வீட்டில் இருக்கும் மற்ற மூன்று மருமகள்களுக்கும் கொண்டாட்டமாக இருந்தது. இதனை செலிப்ரேட் பண்ணும் விதமாக ஜனனியிடம் நந்தினி ட்ரீட் கேட்டுள்ளார்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

உடனே பட்டம்மாள் அப்பத்தா நீங்கள்தான் ஜனனிக்கு ட்ரீட் வைக்க வேண்டும் இன்று ஆன்லைனில் ஆர்டர் செய்ய சொல்கிறார். ஆனால் அவர்களிடம் மொபைல் போன் இல்லாததால் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. இதற்கு அப்பத்தான் நீங்கள் எல்லாம் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு உங்கள் பெயரில் ஒரு அக்கவுண்ட் கூட இல்லை என்று மருமகள்களை தூண்டுவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார். ஆனால் வீட்டின் கார் டிரைவரோ குணசேகரன் அய்யாவிடம் கேட்டுட்டு கூட்டி செல்கிறேன் என்று அப்பத்தாவிடம் சொல்கிறார். அதற்கு அப்பத்தா அவர்கள் சொன்ன பிறகுதான் நான் செல்ல வேண்டும் என்றால் எனக்கு இது தேவையே இல்லை என்று கூறுகிறார்.

Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

இதனை விசாலாட்சியும் ஆதிராவும் கவனித்துக் கொண்டிருந்தனர் . அப்பொழுது ஆதிரை நீங்கள் அடிக்கின்ற கூத்துக்கு நான் ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கின்றேன். என்று அண்ணிகளையும் அப்பத்தாவையும் மிரட்டுகிறார் . ஆதிரைவை ஜென்னி சும்மா எங்களை மிரட்டாதே என்று அதட்டுகிறார். உடனே விசாலாட்சியும் ஆதிரையை பார்த்து, ‘இதையெல்லாம் போய் உங்கள் அண்ணாவிடம் சொல்லிக் கொண்டிருக்காது’ என்று பல்பு கொடுக்கிறார்.

பணம் பத்தும் செய்யும்! பணம் பாதாளம் வரை பாயும்! என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் கூட்டணிக்கு வீட்டில் இருப்பவர்கள் பணிந்து போவதால், விரைவில் குணசேகரனும் வீட்டில் இருக்கும் பெண்களையும் மதிப்பு கொடுக்க வைத்து விடுவார்கள் போல் தெரிகிறது.

Trending News