புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடும் பொன்னியின் செல்வன் நடிகர்.. மார்க்கெட் குறையவே எடுத்த அவதாரம்

தன்னுடைய வில்லத்தனமான நடிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு நடிகரை சமீப காலமாக தமிழ் படங்களில் பார்க்க முடிவதில்லை. எங்கே போனார், என்ன ஆனார் என்று கூட தெரியாமல் இருந்தது. இப்படி காணாமல் போய்விட்டார் என்று நினைத்த இந்த நடிகர் சத்தமே இல்லாமல் வேறொரு வேலையில் இறங்கி இருக்கிறார்.

தமிழில் இவருக்கு நல்ல மார்க்கெட் தான் இன்றளவும் இருக்கிறது. இதற்கு காரணம் இவருடைய எதார்த்தமான நடிப்பு தான். ஆனால் இவர் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதையெல்லாம் கண்டு கொள்வதாய் இல்லை. நல்ல நடிகர் என முத்திரை குத்தப்பட்ட இந்த நடிகர் படங்களில் நடிப்பதை முற்றிலும் குறைத்து கொண்டார். முழுக்க முழுக்க இப்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்

இவர் எப்போதுமே நடிப்பில் சளைத்தவர் எல்லை. தான் நடிக்கும் வெப் தொடர்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்தாலும், இப்போது வெப் தொடர்களின் மூலம் அந்த ஏக்கத்தை போக்கி இருக்கிறார் இந்த நடிகர்.

சமீபத்தில் வெளியான வெப் தொடரில் இவரின் நடிப்பு கொஞ்சம் கவனிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு காரணம் அவர் நடித்த காட்சிகள் அப்படி. சமீபத்தில் நெட்பிளிக்சில் ரிலீசான தொடர் தான் ஷீ. மும்பையில் நடக்கும் போதை பொருளை பற்றிய கதை தான் என்றாலும், இதை ஆபாசமான காட்சிகள் அதிகமாகவே இருந்தது.

Also Read: பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி

இந்த நடிகர் அந்த தொடரின் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் இவர் அடிக்கும் லூட்டி படு கவர்ச்சியாக இருக்கிறது. இந்த காட்சிகள் பார்ப்பவர்கள் கொஞ்சம் முகம் சுளிக்கும் படி இருந்தது. படங்களில் மார்க்கெட் குறையவும் இப்படி ஒரு அவதாரத்தை எடுத்துவிட்டார் போல இந்த நடிகர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் கதாபாத்திரத்தில் மந்திரவாதியாக நடித்த கிஷோர் தான் அந்த நடிகர் . இதைப்போல் காந்தார படத்திலும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார். மேலும் கபாலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக வீரசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

 

 

Trending News