திரிஷா அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள 5 படங்கள்.. 19 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் குந்தவை

40 வயதை எட்டிய திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இப்போதும் பருவ மங்கையாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். அதிலும் இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தோன்றிய திரிஷா, 19 வருடத்திற்கு பிறகு மறுபடியும் விஜய்யுடன் ஜோடி போட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இடம் பெறாததால் அவர் விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பட குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

தளபதி 67: கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற நான்கு படங்களை தொடர்ந்து விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 67 படத்தில் அவருக்கு 19 வருடங்கள் கழித்து ஜோடியாக திரிஷா இணைகிறார். இவர்களது இருவரின் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 படமும் பக்கா ஆக்சன் படமாக உருவாகிறது.

பொன்னியின் செல்வன் 2: கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆன மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இதில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகு தேவதையாக ரசிகர்களுக்கு தோன்றிய திரிஷா இரண்டாம் பாகத்திலும் அதே குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை மறுபடியும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பார்ப்பதற்கு ரசிகர்களும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2: 2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இணைந்து நடித்த ரொமான்டிக் காதல் திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்த நிலையில் சீக்கிரம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும் அதில் திரிஷாதான் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் சமீபத்திய தகவல் வெளியானது.

சூர்யா 44: சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் அடுத்ததாக சூர்யா 44 படம் உருவாக இருக்கிறது. இது பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக வரும் கோடைகால விடுமுறையில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா இணைகிறார்.

இவ்வாறு 2023 ஆம் ஆண்டில் மட்டும் திரிஷா கையில் டாப் 5 ஹீரோக்களின் 5 படங்கள் இருப்பதால், இந்த வருடத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்களில் அவர் முகம் தான் தெரியப்போகிறது. அதிலும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் தளபதி 67 படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.