செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் தூசு தட்டப்படும் கௌதம் மேனனின் படம்.. வசமாய் சிக்கி கொண்ட விக்ரம்

நடிகர் விக்ரமுக்கு கடந்த 2022 ஆம் வருடம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீசாகின. கோப்ரா விக்ரம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தற்போது இரண்டாம் பாகமும் ரிலீசாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதந்திர இந்தியாவிற்கு முன் தங்க சுரங்கத்தில் வேலை செய்த இந்தியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுகிறது. படப்பிடிப்பு வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: கமல், விக்ரமை ஓரம் கட்டிய புதிய ஹீரோ.. முதல் படத்திலேயே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தம்பி

நடிகர் விக்ரமுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் என்னும் படம் அப்படியே பாதியிலேயே நிற்கிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்தப் படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பிரித்விராஜ் சுகுமாரன், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களோடு துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஏழு நாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டது.

Also Read: தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்

இந்நிலையில் இந்தப் படம் திடீரென்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாளா, செந்தில் வீராசாமி, பி மதன் என ஆரம்பத்திலேயே ஐந்து தயாரிப்பாளர்களைக் கொண்டு இந்தப் படம் தயாரிப்பு பணியை தொடங்கியது. ஆனால் பல பிரச்சினைகளால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிரச்சனைக்கு முதல் காரணமாக சொல்லப்படுவது பணம்தான். பல வருடங்களாக இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சண்டை போட்டு வந்தார். ஆனால் திடீரென்று தற்போது கௌதம் மேனனுக்கு போன் செய்து ஐந்து நாள் கால்ஷீட் தருகிறேன், படத்திற்கு தேவையான பணத்தையும் தருகிறேன் என்று கூறியிருக்கிறாரா. ஐந்து நாட்களுக்கு அப்புறம் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் அதற்குள் படத்தை முடித்து விடுங்கள், இந்த படம் ரிலீஸ் பண்ணியே ஆக வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டாராம் விக்ரம்.

Also Read: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பட வாய்ப்பு.. மரண ஹிட் கொடுத்த பின் வாய்ப்பிற்காக கெஞ்சும் சியான்

Trending News