ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி போல் பட்டப்பெயரோடு சுத்தும் 6 நடிகர்கள்.. 45 வருடங்களாக மாறாத பரட்டை

சினிமாவை பொறுத்த வரையிலும் ஹீரோக்கள் படங்களில் வரும் கேரக்டரில் நடிப்பது மட்டுமல்லாமல் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களாகவே வாழ்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில்  பிரபலமாகி உள்ளது. இந்நிலையில் இவர்கள் நடித்த கதாபாத்திரமே பிற்காலத்தில் இவர்களுக்கு பட்டப் பெயராகவே மாறிவிட்டது. அப்படி பட்டப்பெயரோடு சுத்தும் 6 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

ரஜினிகாந்த்: பாரதிராஜா இயக்கத்தில் சரத்குமார், ஸ்ரீதேவி, ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இதில் ரஜினிகாந்த் பரட்டை என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார். அதிலும் படத்தில் வரும் பத்த வச்சிட்டியே பரட்டை என்னும் வசனம் இன்றளவும் மீம்ஸ் வடிவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: கேட்டாலே கொடுத்திருப்பேன்.. அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து அதிருப்தியில் ரஜினி

சரவணன்: அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இதில் சரவணன் கார்த்திக்கு சித்தப்பாவாக செவ்வாழை என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் சித்தப்பு என்னும் துணை கதாபாத்திரம் இப்படத்திற்கு பிறகும் பெரிய அளவில் பேசப்பட்டது.

சரத்குமார்: இயக்குனர் விக்ரம் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் சூரியவம்சம். இதில் சரத்குமார் உடன் தேவயானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிலும் குடும்ப புகைப்படம் எடுக்கும் பொழுது சின்ராசு மட்டும் இன்னும் வரலைங்க என்னும் வசனம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவில் பயங்கர ட்ரெண்ட் ஆனது.

Also Read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

விஜயகுமார்: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், மீனா, குஷ்பூ, விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்  நாட்டாமை. அதில் 18 பட்டி பஞ்சாயத்திற்கும் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாக விஜயகுமார் நடித்திருப்பார். அந்தப் படத்திற்குப் பிறகு இவர் நிறைய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நாட்டாமை ஆகவே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

மைக் மோகன்: பல படங்களில் பாடகராக தோன்றி வெள்ளிவிழா நாயகன் என்ற பெயரைப் பெற்றவர் தான் மைக் மோகன். இவர் நடித்த படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. அதிலும் இவர் நடித்த படங்களில் வரும் பெரும்பாலான பாடல்களில் மேடை பாடகராக மைக் பிடித்து பாடியதில் மிகவும் பிரபலமானார்.

விக்ரம்: இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சேது. இதில் விக்ரம்  கல்லூரி குரூப்பின் தலைவனாக சியான் என்னும் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலிருந்து இவர் சியான் விக்ரம் ஆக பிரபலமானார்.

Also Read: 5 டைட்டில்களை விட்டு கொடுக்காமல் அடம்பிடிக்கும் கமல், விக்ரம்.. கிடப்பில் போடப்பட்ட படங்கள்

Trending News