தளபதி விஜய், முதன் முறையாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் அவர் நேரடியான தெலுங்கு படத்தின் மூலம் ஆந்திராவில் களம் இறங்கினார். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே விஜய்க்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருந்தன. போதாத குறைக்கு படத்தின் தயாரிப்பாளர் வேறு பல பிரச்சனைகளை உருவாக்கினார்.
இதுவரை தளபதி விஜய்க்கு 100 கோடி சம்பளமாக இருந்தது. ஆனால் தில் ராஜு வாரிசு திரைப்படத்திற்காக விஜய்க்கு 120 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்து முதல் பிரச்சனையை தொடங்கினார். சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டது போல் நடிகர் விஜய்யின் சம்பளத்தை இவர் ஏத்தி விட்டதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கே.ஏன் ராஜன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.
இதற்கிடையில் நடிகர் அஜித்தின் துணிவு படம் வாரிசுடன் ரிலீஸ் ஆகும் தகவல் வெளியானதும், பத்திரிக்கையாளர்களிடையே விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பினார். இது இப்போது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரஜினிகாந்த், விஜய் ரசிகர்களிடையேயும் பூதாகார பிரச்சினையை கிளப்பியது.
இது போதாது என்று தெலுங்கு வாரிசு படத்தில், டைட்டில் கார்டில் தளபதி விஜய் என்று இல்ல்லாமல், சூப்பர் ஸ்டார் விஜய் என்று போட்டு இருக்கிறார். இது படம் பார்த்த நிறைய பேரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நிறைய பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக திருப்பூர் சுப்ரமணியன் இதை பற்றி பேசியிருக்கிறார்.
Also Read: திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்.. தளபதி 67 மிரட்டும் கதாபாத்திரம்
இப்படி திமிராக தில் ராஜு ஆந்திராவில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு அளித்தது கண்டிக்கத்தக்கது, விஜய் ஏன் இதை கேட்கவில்லை என்று புரியவில்லை கூறிய அவர், கூடிய விரைவில் விஜய் தயாரிப்பாளர் திலராஜூவை கண்டிக்க வேண்டும், இது இனி தொடரக்கூடாது என்றும் திருப்பூர் சுப்ரமணியன்கூறியிருக்கிறார்.
இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சணை தமிழ் சினிமாவில் ஒரு பெரிய விவாத பொருளாகவே மாறியிருக்கிறது. ஆனால் பல பிரபலங்களின் கேள்வியும், விஜய் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தான். இப்படி ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருக்கும் போது விஜய் கண்டிப்பாக இது பற்றி பேசியே ஆக வேண்டும் என்பது தான் நிறைய பேரின் கருத்து.
Also Read: விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்