வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் பத்து தல. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் கலையரசன், பிரியா பவானி சங்கர் மற்றும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு, படத்தை தொடர்ந்து பத்து தல படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிம்புவின் கெட்டப்பை பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கிறது. அதாவது தொட்டி ஜெயா படத்தில் எப்படி இருந்தாரோ கிட்டதட்ட அதேபோல் உள்ளார்.

Also Read : சிம்பு செய்த தவறால் கேன்சலான 3 படங்கள்.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் போடும் ஆட்டம்

அதுமட்டுமின்றி சிம்பு கத்தி, துப்பாக்கியுடன் இருக்கும் பத்து தல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் பத்துதல படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் இப்போது பத்து தல படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து தல படத்தில் சிம்பு மாஸ் காட்டி உள்ளார் என்பது ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது தெரிகிறது.

Also Read : தனுஷ், சிவகார்த்திகேயனின் ஆணிவேரை பிடுங்கிய சிம்பு.. இனி எல்லாமே பத்து தல ஆட்டம் தான்

அதாவது சிம்பு இந்த படத்தில் முழுக்க முழுக்க ரவுடியாக நடித்துள்ளார். மண்ணை ஆள்றவனுக்கு தான் இது எல்லை மண்ண அல்ரவனுக்கு இல்ல, படியேறி மேல வந்தவன் இல்ல எதிரிகளை மிதிச்சேரி மேல வந்தவன்,என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது என மாஸ் டயலாக்குகளை சிம்பு தெறிக்கவிட்டுள்ளார். மேலும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read : பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்-சிம்பு கூட்டணி.. கோடம்பாக்கத்தை பரபரப்பாகிய அப்டேட்

- Advertisement -

Trending News