திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

33 வயதாகியும் திருமணமாகாத விஜய்யின் தங்கை.. எப்படி வரவேண்டியவங்க புலம்பித் தவித்த பரிதாபம்

தளபதி விஜய்யின் ரசிகர்கள் எப்போதுமே அவரிடம் மாஸ் மற்றும் கிளாஸான திரைப்படங்களை தான் எதிர்பார்ப்பார்கள். மேலும் அவர் காமெடி காட்சிகளிலும் பயங்கரமாக அசத்தக் கூடியவர். விஜய் பல ஆக்சன் படங்களில் பட்டையை கிளப்பியிருந்தாலும், அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஹிட் படங்கள் என்றால் அது கில்லி மற்றும் திருப்பாச்சி படங்கள் தான்.

இந்த படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது அவருடைய தங்கச்சி செண்டிமெண்ட் தான். விஜய், அண்ணன்-தங்கச்சி சென்டிமென்டில் நடித்த அத்தனை படங்களுமே அவருக்கு பயங்கரமாக ஒர்கவுட் ஆகி இருக்கிறது. தங்கைகளுடனான காமெடி காட்சிகளாக இருக்கட்டும், உணர்வுபூர்வமான காட்சிகளாக இருக்கட்டும் அசத்தி விடுவார் தளபதி.

Also Read:18 வருடத்திற்கு முன் விஜய்யுடன் லோகேஷ்-க்கு நடிக்க கிடைத்த பட வாய்ப்பு.. தலைகீழாக மாற்றிய இயக்குனர்

ஆட்டோகிராப் பட நடிகை மல்லிகா, சரண்யா மோகன் போன்றோர் விஜய்க்கு தங்கையாக நடித்திருக்கிறார்கள். இதில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அண்ணன்-தங்கை காம்போ என்றால் அது கில்லி படம் தான். அத்தனை காட்சிகளும் ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும் இருக்கும். இதில் விஜய்க்கு தங்கையாக ஜெனிபர் நடித்திருப்பார்.

கபடி வீரர் வேலுவாக வரும் விஜய்க்கு, தங்கை புவனாவாக ஜெனி நடித்திருப்பார். இவர்கள் இருவரது காம்போவில் காமெடி காட்சிகள் இன்றுவரை பிரபலமானவை. இவர் ஏற்கனவே விஜய்யுடன் நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அது போன்று 25க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Also Read:கேப்டனுக்கு மட்டுமே பயப்படும் லியோ பட நடிகர்.. அடித்துப் பிடித்து ஓடவிட்ட தருணம்

கில்லி திரைப்படத்திற்கு பிறகு பயங்கரமாக உடல் எடையை குறைத்த இவர், தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் இவர் எந்தவித மீடியா தொடர்பும் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை போட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அந்த பதிவில், எனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தையும் பிறக்கவில்லை, சொந்தமாக வீடு இல்லை நண்பர்கள் குறைவு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது எல்லாம் எனது சொந்த பிரச்சினை இதைப்பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு கெட்ட வார்த்தை சொல்வது போல டேஷ் டேஷ் டேஷ் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும், என்னைப் போல உலகத்தில் யாரும் இல்லை நான் மட்டும்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மகிழ்ச்சியாகவே இருப்பேன், என்னை கேள்வி கேட்க உரிமை யாருக்கும் இல்லை என கூறியுள்ளார்.

Also Read:புது அவதாரம் எடுக்கும் விஷால்.. தளபதி விஜய்யின் கைராசியால் வந்த விடிவுகாலம்

Trending News