அன்றைய காலகட்டங்களில் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்திய சீரியல்தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் மறுபடியும் கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்திலும் மீண்டும் ஒளிபரப்பு செய்து இன்றைய தலைமுறைகளையும் பார்க்க வைத்தனர். இந்த சீரியலில் நடித்த 5 சகோதரிகளும் வெகு சீக்கிரமே சினிமா வாய்ப்பு கிடைத்து முன்னேறினார்கள். இதில் விஜி கதாபாத்திரத்தில் பாசமுள்ள மகளாக நடித்த உமா மகேஸ்வரி அந்த சீரியலில் தவிர்க்க முடியாத நபராக மாறினார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தார். இளம் வயதில் திடீரென்று உயிரிழந்த விஜியின் மரணத்தால் பலரும் வேதனையடைந்தனர். இவருடைய திடீர் மரணத்திற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. விஜி, மெட்டி ஒலி சீரியலில் மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் உன்னை நினைத்து, வெற்றி கொடிக்கட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த இவர் சினிமா சம்பந்தம் இல்லாத வேறு நபரை திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்ற வாழ்க்கையை மெட்டி ஒலி விஜியினாலே மாறியது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என கேட்க, அதற்கு கணவர் ஒத்துக்கொள்ளவில்லை.
எனது அக்கா மாதிரி நானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு கணவன் நீ சினிமாவில் உள்ளவரை திருமணம் செய்திருக்க வேண்டும் என்னை பண்ணியிருக்கக் கூடாது. இது ஒரு கட்டத்தில் தினம்தோறும் அவர்களுக்கிடையே சண்டையாக மாறி உடல் இளைத்து மஞ்சள் காமாலை ஏற்பட்டு மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டார் விஜி.
Also Read: ரவிக்கை இல்ல, முதல் மரியாதை ராதா போல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி.. நெட்டிசன்களை விளாசிய சம்பவம்
அதுமட்டுமல்ல மெட்டி ஒலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் அந்த சீரியலின் இயக்குனர் திருமுருகனை காதலித்தார். அவரை திருமணம் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இவருடைய நடிப்பு ஆசையை முழுமையாக புரிந்து கொண்டவரையாவது திருமணம் செய்திருக்க வேண்டும்.
இல்லை என்றால் சினிமாவை விட்டிருக்க வேண்டும். கடைசியில் காதலையும் தொலைத்து உயிரையும் விட்டுவிட்டார். வெறும் 40 வயதில் திடீரென்று இறந்து போன விஜியின் மறைவு சின்னத்திரை ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவருடைய மரணத்தை குறித்து உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவத்தன்று அவர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன் பிறகு உயிரிழந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
Also Read: அந்தரங்க வீடியோவுக்கு 15 லட்சம் கேட்ட சன் டிவி நடிகை.. ஆனாலும் தில்லு ஜாஸ்தி