மாஸ்டரில் வாங்கிய பல்பால் அடக்கி வாசிக்கும் சாந்தனு.. புருஷனுக்காக களத்தில் இறங்கிய பொண்டாட்டி

நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்பு, சக்கரகட்டி என்னும் படத்தின் மூலம் ஹீரோவானார். இவர் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் நடனம் ஆட கூடியவரும் ஆவார். முதல் படத்திலேயே சாந்தனுவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகமானதாக இருந்தார்கள்.

நல்ல நடிப்பு திறமை மற்றும் நடனத் திறமை இருந்தும் சாந்தனு பாக்யராஜ் இன்றுவரை ராசி இல்லாத நடிகராகவே பார்க்கப்படுகிறார். ஆரம்ப காலங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் அதை சரியாக பயன்படுத்தாததுதான் இன்று இவருடைய நிலைக்கு காரணம் என்று கூட சொல்லலாம். தொடர்ந்து கதை தேர்வுகளில் கோட்டையை விட்டதால்தான் சாந்தனுவால் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை.

வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் என இவர் நடித்தாலும் அவையெல்லாம் எண்ணிக்கை கணக்காக மட்டுமே இருக்கிறதே தவிர எந்த ஒரு வெற்றியையும் அல்லது சினிமாவில் இவருக்கான அடையாளத்தையும் இன்று வரை கொடுக்கவில்லை. கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் பாக்யராஜின் மகன் என்பதால் இவர் மீது அந்த அழுத்தம் இருப்பதாக இவரே சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

சாந்தனு பாக்யராஜிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்தது தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். படத்தில் கமிட் ஆனதிலிருந்தே சாந்தனு கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஓவராக பில்டப் பேசிய அளவுக்கு படத்தில் அவரது கதாபாத்திரம் கனமாக இல்லை. இதனால் நெட்டிசன்களிடையே பல ட்ரோல்களுக்கு உள்ளானார் இவர். படம் ரிலீசான புதிரில் இவருடைய பார்கவ் கேரக்டரை வைத்து பல மீம்ஸ்கள் வெளியாகின.

இவர் சமீபத்தில் இராவண கூட்டம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் கிடைத்த ஏமாற்றம் இவருடைய சமீபத்திய பேட்டிகளிலேயே நன்றாக தெரிகிறது. படத்தைப் பற்றி பில்டப் எதுவும் பேசாமல் ரொம்பவும் தன்னடக்கமாகவும், இந்த படத்தில் நடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகிறார். தற்போது அவருடைய பிரமோஷன் வேலைகளை கீர்த்தி சாந்தனு செய்து வருகிறார்.

சாந்தனுவின் காதல் மனைவி கீர்த்தி சாந்தனு பிரபல தொகுப்பாளினி மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் இராவண கூட்டம் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு தன்னுடைய குழு உடன் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் கணவரின் படம் வெற்றி பெறுவதற்காக கீர்த்தி இதுபோல் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.