புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சுத்தியலுடன் மிரட்டும் சுந்தர் சி-யின் தலைநகரம் 2 போஸ்டர்.. ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடித்த தலைநகரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு 17 வருடத்திற்கு பின் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுத்தியலுடன் மாஸ் லுக்கில் சுந்தர்.சி இருக்கும் தலைநகரம் 2 போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் வெளியாகி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது.

Also Read: உங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களா!. அடுத்தடுத்து ஷாக்கான புகைப்படங்களை வெளியிடும் குஷ்புவின் மகள்

இதன் தொடர்ச்சியாக இப்போது தலைநகரம் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை சற்றுமுன் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அந்த புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படமும் ஜூன் 29 ஆம் தேதியை தான் குறி வைத்து இருக்கிறது. அதே தினத்தில் தான் தலைநகரம் 2 படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கண் கூச வைத்த குஷ்புவின் மகள்.. அம்மாவை மிஞ்சும் அளவுக்கு காட்டிய கவர்ச்சி, ஷாக் கொடுத்த போட்டோ

மேலும் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதனால் கடைசி கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியாகும் மாமன்னன் படத்திற்கு எந்த போட்டியும் இருக்கக் கூடாது என உறுதியாக இருந்தார்.

அதனால் தான் அவர் டிஸ்ட்ரிபியூஷன் செய்யும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை கூட மாற்றி வைத்தனர். இந்த நிலையில் திடீரென்று ஜூன் மாதம் தலைநகரம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கும் சுந்தர்.சி-யின் அறிவிப்பு தற்போது மாமன்னன் படக்குழுவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுந்தர் சி-யின் தலைநகரம் 2 போஸ்டர்

sundar-c-cinemapettai
sundar-c–thalainagaram-2-cinemapettai

Also Read: இறப்பதற்கு முன் நடிகையின் மீது உச்சகட்ட லவ்வில் இருந்த சுந்தர் சி.. குஷ்பூவால் சொல்ல முடியாமல் போன காதல்

- Advertisement -spot_img

Trending News