ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

பல வருட ரெக்கார்டு, புலிமுருகனை தூக்கி சாப்பிட்ட வசூல்.. மோகன்லாலுக்கு பயத்தை காட்டிய இயக்குனர்

தென்னிந்திய சினிமாக்களில் கடந்து சில வருடங்களாக உலக சினிமா கொண்டாடும் வகையில் நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்திய சினிமாவின் உயர்ந்த இடமாக பார்க்கப்படும் பாலிவுட் சினிமா உலகமே தென் இந்திய சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் வசூலை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறது. தற்போது ரிலீசான ஒரு படத்தின் வசூல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுலகையும் கதிகலங்க செய்திருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் தான் கோடிக்கணக்கில் வசூலை அள்ளும், அதிக வரவேற்பும் இருக்கும் என்று ஒரு எழுதப்படாத நம்பிக்கை தென்னிந்திய சினிமாவில் இருந்தது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. படத்தின் கதை நன்றாக இருந்தாலே அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடுகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணமாக வந்தது தான் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் கூட.

Also Read:நாலு வருட பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ரெக்கார்டை உடைத்த ஒரே படம்

அந்த வகையில் தான் கேரளாவில் 2018 என்ற படம். இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இது. 2018 ஆம் ஆண்டு நடந்த மலை வெள்ளத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. மனித உணர்வுகளை தாண்டி மிகப் பெரிய சக்தி எதுவுமே இல்லை என்பதை மையமாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டது.

இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் இயற்கை பேரிடரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் தான். இது மக்களிடையே வெகுவாக கனெக்ட் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த படத்திற்கு இப்படி ஒரு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

Also Read:தேடி போன மோகன்லால்.. தட்டி கழித்த கமலஹாசன், ரிஷப் ஷெட்டி

மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்று சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புலி முருகன் திரைப்படம் இருந்தது. இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வசூலை தான் 2018 திரைப்படம் முறியடித்திருக்கிறது. அதாவது ரிலீஸ் ஆகி 17 நாட்களில் 137 கோடி வசூலித்திருக்கிறது இந்த படம். மலையாள சினிமா உலகின் உச்ச வசூல் தற்போது இந்த படம் தான்.

கூடிய விரைவில் இந்த படம் 150 கோடி வசூல் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்கனவே மோகன்லாலின் லூசிபர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருந்த 2018 திரைப்படம், தற்போது மோகன்லால் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற புலி முருகன் திரைப்படத்தையும் வசூலையும் வாரி சுருட்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போதைக்கு மலையாள சினிமா உலகின் இண்டஸ்ட்ரி ஹிட் 2018 படம் தான்.

Also Read:வெளிநாடுகளில் மாஸ் காட்டிய 3 மலையாள திரைப்படங்கள்.. மனிதத்தை போற்றும் ‘2018’

- Advertisement -spot_img

Trending News