ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அப்பவே த்ரிஷாவுக்கு போட்டி நயன்தாரா இல்லையாம்.. ஒழித்துக் கட்ட வந்த நடிகையை சிங்கிளாக துவம்சம் செய்த மாமி

த்ரிஷாவா, நயன்தாரா என்ற அளவுக்கு ஒரு காலத்தில் இவர்களுக்குள் கடும் போட்டி இருந்து வந்தது. அதிலும் நயன்தாராவின் வரவு த்ரிஷாவின் மார்க்கெட்டையே முடித்து வைத்துவிட்டது என்று வெளிப்படையாகவே செய்திகள் வந்தது. ஆனால் அதெல்லாம் கிடையாது என்று 40 வயதிலும் கெத்து காட்டிக் கொண்டிருக்கும் மாமியை ஒழித்துக் கட்ட வந்தவர் தான் அந்த நடிகை.

அதாவது த்ரிஷா முன்னணி அந்தஸ்தில் இருந்த காலகட்டத்தில் அறிமுகமானவர் தான் நடிகை அசின். நயன்தாரா நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு முன்பே இந்த நடிகைகளுக்குள் சரியான போட்டி நடந்து வந்தது. அதிலும் அசின், த்ரிஷாவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சபதம் போடாத குறையாக சுற்றி வந்தார்.

Also read: திரிஷா வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 ஹீரோக்கள்.. பல்வாள் தேவனால் நிச்சயதார்த்தத்தோடு நின்ற கல்யாணம்

இந்த மங்கம்மா சபதத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் பல வேலைகளையும் பார்த்து இருக்கிறார். அந்த வகையில் த்ரிஷா ஃபாண்டா குளிர்பான நிறுவனத்தின் அம்பாசிடராக இருந்த சமயத்தில் இவரும் போட்டிக்காகவே மிராண்டா குளிர்பான அம்பாசிடராக மாறினார். இதில் என்ன தொழில் ரகசியம் என்றால் இரண்டுமே ஆரஞ்சு குளிர்பானம் தான்.

இப்படி இந்த நடிகைகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நன்றாகவே லாபம் பார்த்தது. இது மட்டுமின்றி அசின், த்ரிஷா எந்த முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறாரோ அந்த நடிகர்களுடன் நடிப்பதையே விரும்பினார். அதை நடத்தியும் காண்பித்தார். அந்த அளவுக்கு அவர் த்ரிஷாவை பரம எதிரியாக நினைத்தார் என்பது தான் உண்மை.

Also read: தனுஷ் மோசமாக வேட்டையாடிய 7 நடிகைகள்.. ஓவராகவே போய் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன்

இப்படி தமிழில் ஒரு ரவுண்டு வந்த அசின் ஹிந்தி திரை உலகிலும் அடியெடுத்து வைத்தார். ஆனால் இங்கு போல் அவரால் அங்கு ஜொலிக்க முடியவில்லை. கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அதற்கு அடுத்தடுத்த படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அந்த கேப்பில் தமிழிலும் இவருக்கான இடம் பறிபோனது.

அதனால் ஒரு பணக்கார தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார் அசின். இவ்வாறு தன்னை ஒழித்து கட்ட வந்த நடிகையை சிங்கிள் ஆளாக துவம்சம் செய்த த்ரிஷா இப்போது நயன்தாராவுக்கு சரியான போட்டியாக மாறி இருக்கிறார். ஆனால் சபதம் போட்டு வாய்ப்பு வாங்கிய அசின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு த்ரிஷா நடிக்கும் படங்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்.

Also read: ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

Trending News