ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திரிஷாவுடன் போட்டி போட்டு மூக்குடைந்த நடிகை.. லியோவால் களத்தில் குதிக்கும் குளிர்பான நடிகை

40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு கொள்ளை அழகுடன் மிளிர்ந்து வருகிறார் திரிஷா. பொன்னியின் செல்வனில் இளவரசியாக ஜொலித்த இவரை தேடி இப்போது வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதுவே மற்ற நடிகைகளின் பொறாமையை தூண்டி இருக்கும் நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு நடிகை இதனால் கொதித்துப் போய் இருக்கிறாராம்.

அதாவது த்ரிஷாவுக்கு மிகப்பெரும் எதிரி என்றால் அது நடிகை அசின் தான். இவர்களுக்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல போட்டிகள் இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல் திரிஷாவை சினிமாவை விட்டு துரத்தி அடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் முன்னணி ஹீரோக்களின் வாய்ப்புகளை எல்லாம் இவர் பறித்து வந்தார்.

Also read: சிங்கத்தை வேட்டையாடும் விஜய்.. லோகேஷ் வெளியிட்ட திரில்லிங் வீடியோ

ஒரு கட்டத்தில் பாலிவுட் திரையுலகில் நடிக்க ஆசைப்பட்டு தமிழை விட்டு சென்றார். ஆனால் அங்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் பணக்கார தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது அசினுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்படியோ அவர் சினிமாவை விட்டு தொலைந்து போனார் என்று திரிஷாவும் கொஞ்ச காலம் நிம்மதியாக சுற்றி வந்தார்.

இந்நிலையில் அந்த நிம்மதியை கெடுக்கவே அசின் மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஏனென்றால் திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விஜய் உடன் லியோ படத்தின் மூலம் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி வரிசை கட்டி நிற்கிறது. இதை தெரிந்து கொண்ட அசின் தற்போது ஒரு பேட்டியில் தன் நடிப்பு ஆசையை நேரடியாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also read: தளபதி 68ல் அந்த விஷயத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. டபுள் ஹேப்பி மூடில் வெங்கட் பிரபு

அதாவது அவரிடம் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நன்றாக இருந்தது, ஆனால் இதை கேட்டு விஜய் கோச்சுக்க போறார் என்று நக்கலாக கூறினார். அதை தொடர்ந்து விஜய் அழைத்தால் மீண்டும் நடிக்க வருவேன் என்று அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திரிஷாவுடன் போட்டி போட்டு இவர் மூக்கு உடைந்தது தான் மிச்சம்.

இந்த நிலையில் தற்போது குழந்தை குட்டி என்று மாறி இருக்கும் அசின் மீண்டும் நடிக்க வந்தால் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. இதற்கு முன்பாக ஃபாண்டா, மிராண்டா குளிர்பானத்தை வைத்து இவர்களின் போட்டி எப்படி இருந்தது என ஊருக்கே தெரியும். இதில் லியோ படத்தைப் பார்த்து மீண்டும் இவர் களத்தில் குதிக்க ஆசைப்படுவது அவருக்கு சாதகமாக முடியுமா என்பது தான் தெரியவில்லை.

Also read: குந்தவை போல குடும்பத்தை சந்திசிரிக்க வைத்த நந்தினி.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பயில்வான்

Trending News