டாப் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்வது தற்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூல் வேட்டையாடியது. அதன்படி வாரிசு படம் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 146 கோடி வசூல் செய்திருந்தது.
மேலும் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான அஜித்தின் துணிவு படமும் 115 கோடி வசூல் செய்தது. இதற்கு அடுத்தபடியாக மணிரத்தினம் இயக்கத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் நல்ல வசூலை ஈட்டியது.
Also Read : 3வது முறையாக போட்டி போடும் சிவகார்த்திகேயன், கார்த்தி.. தீபாவளி ரிலீசுக்கு சரவெடியாக வரப்போகும் படங்கள்
அதாவது கிட்டதட்ட 140 கோடி வசூல் வேட்டையாடி இருந்தது. இவ்வாறு வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் இந்த வருடம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் இன்னும் நான்கு படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதாவது நெல்சன் இயக்கத்தின் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படமும், விஜய்யின் லியோ படமும் கண்டிப்பாக நல்ல வசூலை பெரும். இந்த லிஸ்டில் இணைய சிவகார்த்திகேயனும் மும்மரம் காட்டி வருகிறார். அதாவது டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றி படங்கள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் மிகப்பெரிய சருக்களை கொடுத்தது.
Also Read : விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்
இதனால் இப்போது திட்டம் போட்டு காய் நகர்த்தி உள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது இந்த ஆண்டு இரண்டு படங்களையும் வெளியிட்டு நூறு கோடி வசூலை அள்ளுவதற்கு திட்டம் போட்டுள்ளார். அதன்படி அயலான் மற்றும் மாவீரன் படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ளது.
மேலும் வருகின்ற ஜூலை மாதம் மாவீரன் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயலான் படங்கள் வெளியாகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இல்லாத காரணத்தினால் அவர் நினைத்தபடியே 100 கோடி வசூலை எளிதில் பெற்றிடலாம்.
Also Read : அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்