தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருந்து வருகிறார். கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனே இவர்தான். அந்த அளவுக்கு கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் வசூலில் ஆட்சி செய்து வருகிறார். தற்போது அவர் ஒப்பந்தமாகி இருக்கும் 68 ஆவது படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சம்பளமாக 200 கோடி வரை பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய் ரொம்ப குறுகிய காலத்திலேயே எல்லாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிடவில்லை. ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு நல்ல நிலையை அடைவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயங்கினர். இதனால் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தன் மகனின் கனவை நிறைவேற்றுவதற்காக களத்தில் இறங்கி போராடி விஜய்யை வெற்றி பெற வைத்தார்.
Also Read:விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்து பின் ஏங்கிய 4 நடிகைகள்.. வெறுத்த பின்னர் கல்யாணம் வரை சென்ற காதல்
விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் பூவே உனக்காக திரைப்படம் தான். அதன் பின்னர் தான் விஜய் ஒரு வெற்றி பட ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார். ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பே அவருக்கு அடையாளம் கொடுத்த படம் செந்தூரப்பாண்டி. இந்த படத்தை இயற்றியவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். இந்தப் படம் மூலம் தான் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் கேப்டன் விஜயகாந்த்திற்கு இடையேயான நட்பு என்பது ரொம்பவும் நெருக்கமானது. சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் கிட்டதட்ட 15 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். விஜய் தனியாக நடிக்கும் படம் எதுவும் அவருக்கு பெயர் வாங்கி தராததால், எஸ் ஏ சி என்னுடைய நண்பரான விஜயகாந்த்திடம் தனக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
Also Read:வாழ்நாளில் விஜயகாந்த் நடித்த ஒரே ‘A’ சர்டிபிகேட் படம்.. வளர்த்த குருவிற்காக சம்மதித்த கேப்டன்
விஜயகாந்த் தன்னுடைய நண்பருக்காக சம்பளமே வாங்காமல் செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். இதன் மூலம் விஜய்யின் சினிமா வாழ்க்கையும் வெளிச்சம் பெற்றது. ஆனால் விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவியை விஜய் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமானபோது அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அழைப்பு விடுத்தும் விஜய் சொல்லவில்லை.
விஜயகாந்த் வீட்டு நிகழ்ச்சி எதற்குமே விஜய் கலந்து கொண்டதில்லை. உடல் நலம் சரியில்லாத அவரை பல பிரபலங்களும் நேரில் சந்தித்த பொழுது கூட, விஜய் சென்று பார்க்கவில்லை. மேலும் இன்று வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் செந்தூரப்பாண்டி படத்தைப் பற்றியோ அல்லது விஜயகாந்த் பற்றியோ விஜய் வாயை திறந்து பேசியதே இல்லை. தனக்கு இப்படி ஒரு பாதையை அமைத்துக் கொடுத்த விஜயகாந்த்தை விஜய் இப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
Also Read:வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்