சினிமாவிற்குள் காலங்காலமாக நடக்கிற ஒரு விஷயம் இரு கதாநாயகர்களுக்குள் ஏற்படும் போட்டி தான். அதுவே ஒரு கட்டத்திற்கு பிறகு பொறாமையாக மாறி ஒருத்தரை விட ஒருத்தர் முந்த வேண்டும் என்று உத்வேகத்தில் சில விஷயங்களை செய்வது. அப்படி பார்த்தால் எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் இருந்து தற்போது விஜய்-அஜித் வரை இது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.
இவர்களுக்கு இடையில் ரஜினி மற்றும் கமலுடைய போட்டி எத்தகைய வலுவானது என்று நாம் அனைவருக்கும் தெரிந்தது. இப்பொழுது வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத படி மேடைப்பேச்சுகளில் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் இவர்களுடைய போட்டியை பார்த்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பயப்படும் அளவிற்கு ரஜினி கமல் போட்டி போட்டுக் கொண்டு படை எடுத்து இருக்கிறார்கள்.
அதாவது அப்போதெல்லாம் யாருடைய படம் வெற்றி அடைகிறது என்று தீர்மானிப்பதே அந்த படம் திரையரங்களில் ஓடும் நாட்களை வைத்து தான். அந்த வரிசையில் கமலை விட ரஜினி தான் அதிக பெயர் எடுத்து இருக்கிறார். ஆனாலும் இந்த தராசு அடிக்கடி மாற்றிக் கொண்டே தான் வந்திருக்கிறது. இப்படித்தான் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து இன்றும் பேசும் படமாக ஒரு இடத்தை பெற்றிருக்கிறது.
அப்பொழுது அதே வருடத்தில் வெளியான ரஜினியின் மனிதன் திரைப்படம் சராசரியான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் குறைவான லாபத்தை பெற்றது. அந்த நேரத்தில் ரஜினியின் மனநிலை எப்படி இருந்தது என்றால் ரொம்பவே கொந்தளிப்பில் இருந்திருக்கிறார். எதற்கென்றால் இவர் கூட நாம் தோற்று விட்டோமே என்ற ஒரு நினைப்பில் இந்த படத்தை மறக்கடிக்கும் விதமாக அடுத்து என்னுடைய படம் மிகப்பெரிய வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் சுத்தி இருக்கிறார்.
Also read: உதயநிதி கூப்பிட்டு வர மறுத்த ரஜினி.. கூட்டணி போட ஒப்புக்கொண்ட கமல்
அந்த நேரத்தில் தான் இவருக்கு கிடைத்தது பாட்ஷா திரைப்படம். இப்படம் யாரும் எதிர்பார்க்க முடியாத வெற்றியை கொடுத்து, இப்பொழுதும் இந்த படத்திற்காக ஏங்கும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் இவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏற்ப நான் ஒரு முறை சொன்னால் 100 முறை சொன்னதுக்கு சமம் என்ற வசனம் இவருக்கே பொருந்தக் கூடியதாக அமைந்தது.
அத்துடன் இப்படத்தில் இவர் சொல்லும் அனைத்து வசனங்களும் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இவருக்கான பவரை அதிகரித்துக் கொடுத்தது. மேலும் இந்த படம் திரையரங்கில் வெளிவரும் போது குறைந்தது 100 நாட்கள் ஓடிவிடும் என்ற நினைப்பில் இருந்ததையும் தாண்டி ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி அதிக அளவில் சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் இவர் கமலை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.