விழி பிதுங்கிய மணிரத்னம்.. கடைசி நேரத்தில் தூக்கி விட்ட கமல்

Actor Kamalhassan and Director Manirathinam: தமிழ் சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு படத்தை எடுக்கக்கூடிய கெட்டிக்காரத்தனம் இயக்குனர் மணிரத்தினிடம் இருக்கிறது. அதே மாதிரி வித்தியாசமான படத்தை எடுப்பதிலும் நடிப்பதிலும் சரித்திரம் நின்னு பேசக்கூடிய அளவிற்கு வல்லமை படைத்தவர் உலக நாயகன் கமலஹாசன்.

இப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து சிற்பமாய் செதுக்கி இந்திய சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனது நம் தமிழ் சினிமாவின் நாயகன் படம் தான். இப்படம் காலம் போகப் போக இதனுடைய மகத்துவம் மற்றும் அதனுடைய வித்தியாசங்கள் புரிய ஆரம்பிக்கிறது. ஆனால் இப்படத்தை எடுப்பதற்கு தயாரிப்பாளரிடம் சொன்ன நாட்களையும் தாண்டி மணிரத்தினத்திற்கு 100 நாட்கள் தேவைப்பட்டு இருக்கிறது.

அதாவது ஃபிலிம் ரோலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மட்டுமே 30 அடிக்கு மேல் தாண்டி படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். அப்படி என்றால் இதை எடிட்டிங் செய்வது எவ்வளவு கடினமான ஒரு விஷயம். அதற்காக இதை போராடி எடிட்டிங் செய்து பார்த்தால் அப்பொழுது கூட இந்த படம் ஆறு மணி நேரத்திற்கு நீடித்துள்ளது.

மேலும் இந்த ஆறு மணி நேர படத்தினை குறைக்கவே முடியவில்லை காரணம் அணைத்து காட்சிகளும் அருமையாக இருந்திருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த பிறகு தயாரிப்பாளர் நிறுவனம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. அதாவது இந்தியாவில் புகழ்பெற்ற எட்டு சிறந்த இயக்குனர்களை வரவழைத்து இருக்கிறார்.

பிறகு அவர்கள் மூலம் முக்கிய காட்சிகள் அனைத்தும் தனியாக பிரித்து எடுத்து அதனை ஒரு படமாக உருவாக்கி அதற்குப் பிறகு மக்களுக்கு வழங்கப்பட்ட சரித்திர படம் தான் நாயகன். இந்த அளவிற்கு ஒரு படத்தை இந்திய சினிமாவில் செதுக்கி எடுத்ததே இல்லை.

ஏனென்றால் அனைத்து காட்சிகளும் அருமையாக அமைந்து நாயகன் படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. மேலும் இக்கட்டான சூழ்நிலையில் விழி பிதுங்கி இருந்த மணிரத்தினத்தை தூக்கி விட்டு அவருக்கும் மற்றும் நாயகன் படத்திற்கும் புகழாரம் தன் நடிப்பின் மூலம் கொடுத்தவர் தான் உலக நாயகன்.