Actor Sivakarthikeyan: கடந்த 10 வருடங்களாக கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் சிவகார்த்திகேயன் முக்கிய இடத்தை பிடித்திருப்பார். டிவியில் இருந்து வந்தாலும் தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சினிமாவில் அதை செய்து, தற்போது உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். இவருடைய படங்கள் என்றால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் முத்திரையை பதித்து விட்டார்.
ஆனால் இப்போது யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, அவருடைய டாக்டர், டான் படங்களுக்குப் பிறகு வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்கள் அனைத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து, படுதோல்வியை சந்தித்தார். அதிலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தொடர் தோல்வியை சந்தித்ததால் 80 கோடி வரை கடனில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.
Also Read: பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்
இப்படி ஊர் ஃபுல்லா கடன வச்சுக்கிட்டு எப்படி துணிச்சலுடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை சென்னையில் கட்டும் முடிவுக்கு வந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த தைரியத்தை யார் கொடுத்தார் என்பதை விசாரித்து பார்க்கும்போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாவீரன் மற்றும் அயலான் போன்ற படங்களை லைக்கா நிறுவனம் வெளியிட்டு, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை சிவகார்த்திகேயனிடம் கடன் கொடுத்தவர்களுக்கு கொடுத்து விடுவதாக பிளான் போட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருந்தனர்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் 33 கோடியை கடனாளிகளுக்கு செட்டில் செய்த நிலையில், மீதமிருக்கும் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என கடன் கொடுத்தவர்கள் ஒன்று திரண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அதில் முடிவெடுத்தனர். அந்த வகையில் மாவீரன் படம் வெளியான பின்பு வசூல் ஆகும் பணத்தில் 35 கோடி ரூபாயையும், படம் வெளியாவதற்கு முன்பு 10 கோடி ரூபாயையும் தர வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
Also Read: கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கு.. கமலால் சிவகார்த்திகேயனை போட்டு ஆட்டும் ஏழரை சனி
இந்த பிரச்சினையில் லைக்கா தலையிட்டு சுமூகமாக முடித்து தர முன்வந்து மாவீரன் மற்றும் அயலான் படத்தை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இப்போது லைக்கா நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரைடு மூலம் அந்த பிளான் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் யாரிடம் தஞ்சம் அடைந்தால் கடன் கொடுத்தவர்களுக்கும் டிமிக்கி கொடுத்து காசு பார்க்க முடியும் என மூளையை கசக்கி, தன்னுடைய 2 படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய வேண்டும் என அவர்களிடம் கொடுத்துவிட்டார். விநியோகஸ்தர்களின் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர் பேச்சே கிடையாது.
அதனால் தான் இப்போது சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய 2 படங்களையும் அவர் கையில் கொடுத்து விட்டார். இரண்டு படங்களை ரிலீஸ் செய்து அதன் மூலம் வரும் காசை வைத்து தன்னுடைய கடனை அடைத்துக்கொள்ள நினைக்காமல், பேராசையில் புதிதாக சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை நிறுவ சிவகார்த்திகேயன் முடிவெடுத்திருக்கிறார்.
Also Read: குடும்பமாய் சிவகார்த்திகேயனை அழிக்க நினைத்து நடத்திய சதி.. இந்த மாதிரி கொடுமை நடக்குமா?
இந்த செய்தியை கேட்டதும் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பித் தவிக்கின்றனர். எப்போதுதான் நம்முடைய கடனை சிவகார்த்திகேயன் அடைப்பார் என்று கதறுகின்றனர். இப்படி கடன் கொடுத்தவர்களுக்கு அல்வா கொடுக்கும் சிவகார்த்திகேயனுக்கு உதயநிதி மறைமுகமாக உதவுவது என்ன நியாயம் என்றும் பலரும் முணுமுணுக்கின்றனர்.