உருவகேலியால் கர்வமாய் மாறிய ஹீரோ.. லியோ செட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

Leo: ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்த பொழுதில் ‘முக வசியம் இல்லாத ஹீரோ, இவரெல்லாம் எதுக்கு ஹீரோவாக நடிக்கிறார்’ என பெரிதும் உருவ கேலிக்கு ஆளாகியுள்ள நடிகர், இன்று ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக கலக்கி கொண்டிருக்கிறார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் ஆரம்பத்தில் நந்திரி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். இவர் தமிழுக்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே 7 கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இப்பொழுது அர்ஜுன் விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எப்பொழுதுமே நான் கொஞ்சம் கர்வமான ஆள்’ என்று அவரே சொல்லிக் கொள்வார். சினிமாவில் இப்படி இல்லை என்றால், ஏமாற்றி விடுவார்கள் என அடிக்கடி சொல்லுவாராம்.

இப்பொழுது லியோ படத்திலும் அதே திமிரோடு ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். இவர் இந்த அளவிற்கு திமிரு பிடித்த மனிதராக மாறியதற்கு சுற்றி இருப்பவர்கள் தான் காரணம். ஏனென்றால் சினிமாவில் இவர் நுழையும் போது ஏகப்பட்ட உருவ கேலிக்கு ஆளாகியுள்ளார். அந்த உருவ கேலிகளை எல்லாம் அசால்ட்டாக தூக்கி வீச வேண்டும் என்று தன்னை மிகவும் கர்வமாக எண்ணிக்கொண்டார்.

அதுதான் நாளடைவில் அவர் ஓவராக ஆட்டிட்யூட் காட்டுவதற்கு காரணமாகிவிட்டது இப்போது அர்ஜுன் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டல் ஆன தோற்றத்துடன் நடித்துள்ளார். இதில் அர்ஜுன் ஒரு பக்க முகம் சிதைந்தது போன்ற கொடூரமான கெட்டப்பில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டுடியோவில் விஜய் மற்றும் அர்ஜுனின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவடைந்தது.

மேலும் இந்த படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் கொடூர வில்லனாக நடித்த கதாபாத்திரத்தில் தான் அர்ஜுன் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. மேலும் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே மிச்சம் இருப்பதால் அதை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக எடுப்பதற்காக படக்குழு விரைகிறது.

சீக்கிரம் இந்த படத்தை முடித்து ப்ரமோஷன் வேலைகளிலும் இறங்கப் போகின்றனர். அதற்கு முன்பு லியோ படத்தின் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றாலும் அவர்களை காட்டிலும் அர்ஜுன் தான் செட்டில் ஓவர் திமிருடன் நடந்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான காரணமும் இப்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்படுகிறது.