செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து ஏமாந்துட்டேன்.. கோமண நடிகர் கூறிய பகிர் உண்மை

Actor Siva Karthikeyan: தன்னை தமிழ் சினிமாவில் நிரூபிக்கும் பொருட்டு, பல முயற்சிகளை போட்ட நடிகர்களில் இவரும் ஒருவர். சிறந்த காமெடியனாகவும், முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்தவர் தான் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவரை வைத்து படம் எடுத்து ஏமார்ந்ததாக நடிகர் ஒருவர் பகிர்ந்த உண்மை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பன்முகத்திறமை கொண்ட சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் அறிமுகமாகி, அதன்பின் ரஜினி முருகன், டான், டாக்டர் போன்ற படங்களில் வெற்றி கண்டு தற்பொழுது டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தன் ஆரம்ப காலத்தில், சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கியவர்.

Also Read: KH233 படத்தின் கதை இதுதான்.. மொத்தமாக ரூட்டை மாற்றிய ஹெச்.வினோத், சுடச்சுட வெளிவந்த அப்டேட்

அவ்வாறு வாய்ப்புக்காக ஆரம்பத்தில் நிறைய பேரிடம் கதை கேட்டு நடிக்கவும் செய்தார். சினிமாவிற்குள் நுழைய தகுதியாக கருதப்படும் மேக்கப் டெஸ்ட் இவருக்கும் நடைபெற்றதாம். அவ்வாறு நடைபெற்றும் அப்படத்தை பாதிலேயே நிறுத்தி விடுவார்களாம். இதையெல்லாம் எதிர்கொண்டு வந்தவர்தான் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் 1992ல் பாக்யராஜ் இயக்கி, நடித்த படம் தான் ராசுகுட்டி. இப்படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று தந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜ் புல்லட்டில் ஏறி அவருக்கு குடை பிடித்த படியே வரும் நடிகர் தான் செம்புலி ஜெகன்.

Also Read: இமேஜை பொருட்படுத்தாமல் மீனா செய்த காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்

சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் முக்கிய துணை இயக்குனராக பணியாற்றியவர். மேலும் விஜயகாந்த் படமான சொக்கத்தங்கம் படத்தின் துணை இயக்குனர் ஆவார். அதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு உள்ளார்.

அப்படத்திற்கு சிவகார்த்திகேயனை அழைத்து மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டாராம் செம்புலி ஜெகன். படபிடிப்புக்கு தயாராக இருக்கும் நிலையில், இவருடைய பார்ட்னர் இவரது பணமான 30 லட்சத்தை எடுத்துகொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். அதை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானார் செம்புலி ஜெகன். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து இதுவரை படம் எடுக்க முடியாமல் போயிற்றே என்று வேதனை பட்டு வருகிறார்.

Also Read: நண்பருடன் கள்ள உறவில் இருந்த மனைவி.. போட்டுத்தள்ள முயற்சித்த நடிகர்

Trending News