Shankar And Lokesh Kanagaraj: பொதுவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்தால் பெரிய பொறுப்பு இயக்குனருக்கு தான் இருக்கும். குடும்பம், நண்பர்கள் என எதுவும் பார்க்காமல் முழு நேரமும் படத்திற்கான சிந்தனையிலேயே இருப்பார்கள். அப்படிதான் லோகேஷ் மற்றும் ஷங்கர் இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
ஷங்கர் பல வருடமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது மழையினால் ஆங்காங்கே சூட்டிங் தடைபட்டு நிற்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தலைக்கோனத்தில் நடந்து வருகிறது. அதேபோல் லோகேஷ் கிட்டத்தட்ட ஒரு வருடமாக லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
Also Read : இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் ஷங்கர்
இன்னும் பத்து நாட்களில் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. அதாவது வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் லியோ படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் நிறைவு செய்ய இருக்கிறார். அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று மாதம் பின்னணி வேலைகள் இருக்கிறது.
அதேபோல் இந்தியன் 2 படப்பிடிப்பு ஜூலை நான்காம் தேதியுடன் நிறைவு பெறுகிறதாம். இவ்வாறு இன்னும் சில நாட்களிலேயே லோகேஷ் மற்றும் ஷங்கர் தங்களது படங்களுக்கு கடைசியாக பூசணிக்காய் உடைக்க உள்ளனர். மேலும் லியோ படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது.
Also Read : அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்
அதுமட்டுமின்றி இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருக்கிறதாம். ஆகையால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியன் 2 மற்றும் லியோ இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது. இந்த சமயத்தில் இப்போது படப்பிடிப்பு நிறைவு அடைய உள்ள செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் விரைவில் இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
Also Read : லியோ படத்தில் புதிதாய் கிடைத்த நான்கு அப்டேட்.. எப்படி கசிந்தது என சிபிஐ போல வலை வீசும் லோகேஷ்