வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு மொக்கையாய் போன பரிதாபம்.. தப்பான ஆள் கிட்ட போனதால் விழுந்த பெரிய அடி

Actor Sivakarthikeyan: கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் திரைப்படம், என்னதான் காமெடி ஜானரில் அமைந்திருந்தாலும் படம் பயங்கர ப்ளாப் ஆனது. அடுத்தது நிச்சயம் ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாவீரன் படத்தை தான் மலை போல் நம்பி இருக்கிறார்.

ஆனால் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களும் வெளியாகி மொக்கை வாங்கிவிட்டது. எப்பொழுதுமே சிவகார்த்திகேயன் படத்தில் பாடல்கள் அடித்து தூள் பறக்கும். ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற முதல் பாடலான ‘சீனா சீனா’ என்னும் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி, ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

Also Read: சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

அதன் தொடர்ச்சியாக இப்போது சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் பாடியிருக்கும் பெப்பியான காதல் பாடல் ஆன ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடல் வெளியானது. இதற்கு யுகபாரதி வரிகளை எழுதியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் டாப் நடிகர்களின் லிஸ்டில் இருப்பதால், அவருடைய நடிப்பில் ரிலீசுக்காக காத்திருக்கும் மாவீரன் படத்தின் பாடல்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக ரீச் ஆக வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு பாடல்களுக்கும் எதிர்பார்த்த அளவு வியூஸ் கிடைக்கவில்லை. வழக்கத்துக்கு மாறாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சில விஷயங்கள் மொக்கையாக அமைந்தது. எப்போதுமே திரையில் காமெடியும் கலகலப்புமாக இருக்கக்கூடிய சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ரொம்பவே சீரியசாக காட்டி இருக்கின்றனர்.

Also Read: சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து ஏமாந்துட்டேன்.. கோமண நடிகர் கூறிய பகிர் உண்மை

இது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ஹிட் படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்த அனிருத், இமான் இல்லாதது அவருக்கு ஒரு கை உடைந்துபோன மாதிரி இருக்கிறது. மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் மாவீரன் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினை கண்மூடித்தனமாக நம்பி இறங்கிய சிவகார்த்திகேயனுக்கு, மாவீரன் வெற்றி படமாக அமையுமா என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டிருக்கிறது. இனிமேலாவது அடுத்த அடி பார்த்து எடுத்து வைக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனக்குத்தானே ஆறுதல் சொல்லி கொள்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டாரால் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இயக்குனர்.. சிவகார்த்திகேயன் நண்பனுக்கு இப்படி ஒரு நிலைமையா.?

Trending News