திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உப்பு கருவாடு மனிஷா கொய்ராலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.? ரகசிய வாழ்க்கையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

Actress Manisha Koirala: ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக ரவுண்டு கட்டிய நடிகை மனிஷா கொய்ராலா, தற்போது 52 வயதான நிலையில் பார்ப்பதற்கு உப்பு கருவாடு போல் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை பெரிதும் பதைபதைக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல இவருடைய ரகசிய வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ராஜா குடும்பத்துப் பெண் என்ற சீக்ரெட் தற்போது தெரியவந்துள்ளது. இவர், நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயத்தை செய்திருக்கிறார். ஒரு மினி அரசாங்கத்தை மனிஷா கொய்ராலா நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

Also Read: 7 படங்களில் ஐந்து சூப்பர் ஹிட்.. கேடு கெட்ட பழக்கத்தால் கேரியரை தொலைத்த மனிஷா கொய்ராலா!

நேபாள நாட்டிற்கு பிற நாடுகளில் இருந்து பெண்களை கடத்தி வந்து பலான தொழில்களில் ஈடுபடுத்திய மாஃபியா கும்பலை இவர் மிகத் துணிச்சலுடன் கண்டுபிடித்து, போலீசில் கூண்டோடு சிக்க வைத்தார். அதுமட்டுமல்ல நேபாள நாட்டிற்கு பிழைப்பு தேடிவருபவர்கள், குறிப்பாக வட மாநிலத்திலிருந்து வந்த அகதிகள் தங்குவதற்கான வீடுகளையும் மனிஷா கொய்ராலா கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல பெண்களுக்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கக்கூடிய சானிட்டரி நாப்கினை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று அதற்காகவே சிறிய தொழிற்சாலையை அமைத்திருக்கிறார். ஏனென்றால் பல கிராமங்களில் நாப்கின் குறித்த விழிப்புணர்வு யாருக்கும் கிடையாது. அதனால் இவர் தன்னுடைய சொந்த தொழிற்சாலையில் அவற்றை உற்பத்தி செய்து கிராமத்து பெண்களுக்கு பயன்படுத்த கொடுத்தார்.

Also Read: 90ஸ் இளசுகளை இப்ப வரை கிரங்கடிக்கும் 6 ஆன்ட்டிஸ் நடிகைகள்.. ஜொள்ளு விட்டு திரிந்த கமல், அர்ஜுன்

இவர் கேன்சர் விழிப்புணர்விற்காக பல விஷயங்களை முன்னெடுத்து செயல்படுத்தினார். ஒரு கட்டத்தில் மனிஷா கொய்ராலா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு வந்து, ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு சூப்பர் ஹிட் படங்கள் ஆன இந்தியன், முதல்வன், பாபா போன்ற தமிழ் படங்களில் டாப் நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் படுக்கை அறை மற்றும் கிளாமர் காட்சிகளில் நடிக்க கூச்சப் பட்டுக்கொண்டு, தன்னையே தைரியப்படுத்திக் கொள்ள முதலில் லேசாக மது அருந்த துவங்கினார்.

அதன் பிறகு தான் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு, பின் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டார். அதன்பின் அமெரிக்காவில் ஒரு வருட சிகிச்சை மேற்கொண்டு அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்த மனிஷா கொய்ராலா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுகளை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு மனிஷா கொய்ராலாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த பல ரகசியங்களை சமீபத்திய பேட்டியில் திரைப்பட விமர்சகர், பத்திரிக்கையாளருமான செய்யாறு பாலு வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

உப்பு கருவாடு போல் இருக்கும் மனிஷா கொய்ராலா புகைப்படம்

manisha-koirala-cinemapettai
manisha-koirala-cinemapettai

Also Read: கமலை நம்பி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட 5 தயாரிப்பாளர்கள்.. திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட லிஸ்ட்

Trending News