மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

Tamil Cinema’s Next Super Star: சினிமாவில் கடந்த சில வருடங்கள் ஆகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி வந்து கொண்டிருக்கிறது. ரஜினி இப்போதும் சினிமாவில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இவ்வாறு சூப்பர் ஸ்டாருக்கான மார்க்கெட் தற்போது வரை குறையாத நிலையில் அடுத்ததாக விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. வாரிசு பட விழாவில் சரத்குமார் போன்ற பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என குறிப்பிட்டு பேசியிருந்தனர். ஆனால் விஜய் இதற்கு சம்மதம் மற்றும் மறுப்பு எதுவுமே தெரிவிக்கவில்லை.

ஆகையால் விஜய்க்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஆசை இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் விஜய் அரசியலில் கால் பதிக்க உள்ளார் என்ற செய்தி பூதாகரம் எடுக்க சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய செய்தி கொஞ்சம் அடங்கியது. ஆனால் தற்போது டாப் நடிகர்களின் சம்பளத்தை வைத்து சூப்பர் ஸ்டார் போட்டியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி ஜெயிலர் படத்திற்கு ரஜினிக்கு கிட்டத்தட்ட 120 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய்க்கு தற்போது லியோ படத்தில் 120 கோடி சம்பளம் கொடுத்த நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்திற்கு 200 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ரஜினி, விஜய் இடையே போட்டி நிலவிவரும் நிலையில் கமலை இழுத்து விட்டுள்ளது திரை உலகம்.

அதாவது கமல் தற்போது இந்தியன் 2 படத்திற்கு 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி மணிரத்தினம் மற்றும் வினோத் இயக்கும் படங்களுக்கும் பல கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எக்கச்சக்க சம்பளம் கிடைக்கிறது.

போதாக்குறைக்கு முன்னணி நடிகர்களின் படங்களை தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கமல் தயாரித்து வருகிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரஜினி, விஜய்யை விட ஒரு வருடத்திற்கு சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது உலகநாயகன் தான். இதனால் அடுத்த நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கு தான் என்ன ரசிகர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.