வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

யாருக்கும் அடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்ட கார்த்தி.. முதல் முதலாக அஜித் படத்தில் கம்பேக்

Actor Karthi: சினிமாவில் இருக்கும் நடிகர்களுள் நல்ல குணம் படைத்தவர் கார்த்தி என்ற பெயரை பெற்றிருக்கிறார். அவர் இப்போது நிறைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாடுகிறார். அந்த வகையில் சினிமாவில் ட்ராக் மாறி போன நடிகரை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.

அந்த நடிகர் யார் சொன்னாலும் கேட்காமல் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாகவே காட்ட நினைத்தார். ஆனால் அவருக்கு காமெடி தான் செட் ஆனது. இதை எத்தனையோ பேர் அவரிடம் சொன்னாலும் கேட்காத சந்தானம், இப்போது கார்த்தி சொன்னதும் பழைய டிராக்கிற்கு வந்திருக்கிறார்.

Also Read: இன்று வரை பிசினஸ் ஆகாத கார்த்தி படங்கள்.. ஒரே ஒரு காரணத்தால் வளர முடியாமல் போகும் பருத்திவீரன்

சந்தானம் பல முயற்சிகள் எடுத்து ஹீரோவாக நடித்த, பாதி படங்களுக்கு மேல்தோல்வியடைந்துள்ளது. இதனால் அவர் பெரிய நஷ்டம் அடைந்துள்ளார். சினிமாவில் தனக்கு என்று உள்ள செல்வாக்கான பெயரும் போய்விட்டது.

பெரிய பெரிய ஹீரோக்கள் காமெடியனாக நடிக்க கூப்பிட்டும் வர மறுத்துவிட்டார் சந்தானம். இப்போது எங்கு செல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதை பார்த்து கார்த்தி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் சந்தானம் ஒரு லேடி கெட்டப்பில் வந்திருப்பார்.

Also Read: ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

அந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை போட்டு கார்த்தி சந்தானத்தை, ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்றும், அதற்கு சந்தானம் ‘வந்துட்டேன் வந்தியதேவன் மாமா’ என இருவரும் பேசியுள்ளனர்.

இதிலிருந்து நன்றாக தெரிகிறது, சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக வர ஆசைப்படுகிறார். இனிமேல் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக அஜித்துடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். ஆனால் மக்கள் இவரை பழைய மாதிரி பார்ப்பார்களா என்று தெரியாது.

Also Read: கடைசி நேரத்தில் ஹீரோவை மாற்றிய 5 படங்கள்.. அட ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க வேண்டிய ஹீரோ இவரா!

Trending News