திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்த போகும் தனுஷ்.. மாசாக வந்துள்ள 50வது பட அப்டேட்

Actor Dhanush: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தனுஷ் தனது மகன்களுடன் திருப்பதி சென்றிருந்தார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தாடி மற்றும் முடிவுடன் இருந்த தனுஷ் திடீரென மொட்டை அடித்து விட்டார். மேலும் இதே லுக்கில் தான் தனுஷ் 50 படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அதாவது தனுஷ் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

Also Read : கேப்டன் மில்லரில் இருந்து வெளியே வந்த தனுஷ்.. திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்த வைரல் போட்டோ

அதுமட்டுமின்றி இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க இருக்கிறாராம். மேலும் சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தனுஷ் 50வது படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சினிமாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் பின்னி மில்லில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் இப்போது அங்கு அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு சோழிங்கநல்லூரில் ஒரு அமைச்சர் இடம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அது மரங்களை இல்லாத பொட்டல்காடாக இருப்பதால் தனுஷ் மறுத்துவிட்டாராம். இப்போது வேறு ஒரு பிரம்மாண்ட இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். மேலும் அந்த இடத்தில் கிட்டத்தட்ட 100 வீடுகள் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம்.

Also Read : ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்

மேலும் இதை சுற்றி மரங்களாக இருக்கிறதாம். அப்படியே பார்ப்பதற்கு பசுமை நிறைந்த சூழலாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அடுத்த வாரம் தனுஷ் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம். இப்போது எல்லாம் தயார் நிலையில் இருந்து வருகிறது.

கேப்டன் மில்லர் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நேரத்தில் இப்போது தனுஷ் தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளதால் இந்தப் படம் குறித்த அடுத்த அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி விரைவில் சன் பிக்சர்ஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.

Also Read : நடிகர்களுக்கு இணையாக ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய நடிகைகள்.. ஓவராக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை

Trending News