Thalapthy Vijay: தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் எப்போதுமே அவரைப் பற்றி எல்லா தகவலையும் தெரிந்து வைத்துக் கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். விஜய்யின் முதல் படம், முதல் வெள்ளி விழா கண்ட படம் என அத்தனை தகவலையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களே நோட் பண்ணாத இந்த ஆறு விஷயங்களும் விஜய்யின் சினிமா கேரியரில் இருக்கிறது.
நடிகர் விஜய், விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த திரைப்படம் செந்தூரப்பாண்டி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படம் தான் தமிழ் சினிமாவில் அவருக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் இந்த படத்திற்கு முன்பே விஜய், விஜயகாந்தின் படத்தில் நடித்திருக்கிறார். 1984 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெற்றி திரைப்படத்தில் சிறிய வயது விஜயகாந்த்தாக தளபதி நடித்திருக்கிறார்.
இன்று 2K கிட்ஸ்களால் தளபதி விஜய் என கொண்டாடப்படும் இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு எப்போதுமே ஃபேவரைட் ஆன இளைய தளபதி தான். வெற்றி நாயகனாக இன்று பல படங்களில் கலக்கி வரும் மாஸ் ஹீரோ விஜய் நடித்த 90 களின் காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களை தற்போது விண்டேஜ் விஜய்யின் திரைப்படங்கள் என்று கூட சொல்கிறோம். இந்த இளைய தளபதி என்ற பட்டம் முதன் முதலில் ரசிகன் திரைப்படத்தின் ரிலீஸ் போது தான் இவருக்கு வந்தது.
‘இந்தப் பாடலை பாடி கொண்டிருப்பது உங்கள் விஜய்’ என்ற வசனம் 90ஸ் கிட்ஸ்களால் எப்போதுமே மறக்க முடியாது. இப்போது விஜய் நடிக்கும் படங்களில் அவர் பாடும் பாட்டுகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு தான் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து பாடிய பாடல்களுக்கு இருந்தது. விஜய் முதன் முதலில் ரசிகன் படத்தில் வரும் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ எனும் பாடலை தான் சினிமாவில் பாடினார்.
தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் சமகாலத்து போட்டியாளர்கள் என்பது அனைவரும் அறிந்து ஒன்றுதான். 1984 ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் அவர் நடித்த 10 படங்களையும் அவருடைய தந்தை தான் இயக்கினார். விஜய் முதன் முதலில் வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்தார் என்றால் அது ராஜாவின் பார்வையிலே என்னும் திரைப்படம் தான். இந்த படத்தில் விஜய் உடன் அஜித் இணைந்து நடித்திருந்தார். இதுதான் இவர்கள் முதலில் கடைசியுமாக இணைந்து நடித்த திரைப்படம்.
Also Read:90% வெற்றி மற்றும் வெள்ளி விழா கொடுத்த இயக்குனர்.. 4 படங்களில் கேள்விக்குறியான அஜித் இயக்குனர்
நடிகர் விஜய் காரில் பயணிப்பதாக இருந்தால், முதன் முதலில் காரில் ஏறியவுடன் இளையராஜா பாடலை தான் ப்ளே செய்வாராம். அந்த அளவுக்கு இளையராஜா பாடல்கள் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.
நடிகர் விஜய்க்கு ரொம்ப பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் மற்றொரு நடிகருக்கு தீவிர ரசிகராகவும் இருக்கிறார். ஆரம்ப காலங்களில் விஜய் மற்றும் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஜய் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி அதி தீவிர ரசிகராம்.
Also Read:விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக லியோ படத்தை மெருகேற்றும் லோகேஷ்