Actor Kamalhassan: பாரதிராஜா சினிமாவிற்குள் நுழைந்து இயக்குனராக அவதரித்து எடுத்த முதல் படம் தான் 16 வயதினிலே. இப்படத்தின் கதையே ரெடி பண்ண பிறகு சப்பானி கதாபாத்திரத்தை நிறைய நடிகர்களிடம் கூறி கால்ஷீட் கேட்டிருக்கிறார். அப்பொழுது அந்த நடிகர்கள் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் பலரும் எங்களை கேலி செய்து ஒதுக்கி விடுவார்கள் என்று நடிப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
ஏன் என்றால் கோமணம் அணிந்து கொண்டு, மூக்குத்தி குத்திக் கொண்டு, வாயில் வெத்தலை போட்டுக்கொண்டு பேச வேண்டும். அத்துடன் உடம்பெல்லாம் எப்பொழுதும் சேரும், சகதிமாய் இருக்க வேண்டும் என்பதால் இந்த கேரக்டரை கேட்ட பல நடிகர்கள் நிராகரித்து விட்டார்கள்.
அப்பொழுது பாரதிராஜா இந்த மாதிரி சப்பானி கதாபாத்திரம் இருக்கிறது என்று கமலிடம் சொல்லி இருக்கிறார்.
Also read: 35 வருடங்களாக பாரதிராஜாவிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ரஜினி.. ஒரு தடவை பட்டதே போதும்டா சாமி
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பாரதிராஜா மனதிற்குள் எப்படி நினைத்து வைத்திருந்தாரோ அப்படியே தத்ரூபமாக 100% மாறாமல் சப்பானி தோற்றத்தை செதுக்கி கொண்டு வந்து நின்றிருக்கிறார்.இதை எல்லாம் பார்த்த பாரதிராஜா வாய் அடைத்து போய் நின்று கமலை பாராட்டிருக்கிறார்.
இவருடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வியந்து பார்த்து அப்படியே மிரண்டு இருக்கிறார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தை அதுவும் 22 வயதிலேயே மெச்சூரிட்டியாக யோசித்து பார்த்து வேலையை டெடிகேஷன் ஆக கொடுத்த இவர் தான் தமிழ் சினிமாவின் வாரிசாக இருக்க முடியும் என்று அன்றே தீர்மானித்து சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.
Also read: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி
அத்துடன் இந்த மாதிரி ஒரு நடிகனை யோசிக்கக்கூட முடியவில்லை என்று கமலை பார்த்து ரஜினி வியந்து போய் பாராட்டி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாரதிராஜா சொல்லாமலேயே, கமல் காலை நொண்டிக்கொண்டு நடந்து காட்டி இருக்கிறார். அதற்கு பாரதிராஜா என்ன இருந்தாலும் நீ ஒரு ஹீரோ அதனால் இதை செய்ய வேண்டாம் என்று மறுத்து இருக்கிறார்.
இந்த மனக்குறையை கமல் தீர்ப்பதற்காகவே அன்பே சிவம் படத்தில் அப்படி நடித்திருக்கிறார். இவருடைய அற்பணிப்பு சினிமாவில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து வளர்ந்த பலரும் தான் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களாக முளைத்திருக்கிறார்கள். அத்துடன் இவருடைய நடிப்பு தான் அவர்களுக்கு ஆணிவேராக இருக்கிறது. இதனால் தான் உலக நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
Also read: நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்