சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சரத்குமாரின் ஒட்டு மொத்த சொத்து விபரம்.. ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா.!

Actor Sarathkumar: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோக்களில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒருவர். வில்லனாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த இவர், அதன்பின்னர் கிராமத்து கதைகள் மற்றும் குடும்ப பின்னணி கொண்ட கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர். சரத்குமாரின் படங்கள் என்றாலே தியேட்டரில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நம்பும் அளவிற்கு இவர் நடித்த படங்கள் இருந்தன.

இவருடைய நடிப்பில் நாட்டாமை, சூர்ய வம்சம், நட்புக்காக, சேரன் பாண்டியன் போன்ற படங்களை இன்று தொலைக்காட்சிகளில் போட்டாலும் டிஆர்பி அதிகமாகும். 60 வயதை தாண்டிய போதிலும் சரத்குமார் இன்று வரை தன்னுடைய உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார். இதுவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த ஒரு விஷயமாகும்.

Also Read:பஞ்சாயத்து சீனை வைத்தே ஓடிய 7 படங்கள்.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

முன்னணி ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சரத்குமார், தற்போது வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வாரிசு, பொன்னியின் செல்வன், போர் தொழில் போன்ற படங்கள் அடுத்தடுத்து செம ஹிட் அடித்தன. சமீபத்தில் இவருடைய சம்பள விவரம் மற்றும் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது.

சரத்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஆணழகன் போட்டியில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார். மேலும் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிக்கை துறையிலும் வேலை செய்தார். சினிமாவுக்கு வந்து தான் இவர் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இவருக்கு இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் தான் சரத்குமாரின் இளமைக்காலம் இருந்தது.

Also Read:கதையின் நாயகனாக அவதரித்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் கெட்டியாக பிடித்து வரிசை கட்டி இருக்கும் படங்கள்

சரத்குமார் தற்போது அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்திருப்பதால் ஒரு படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். போர் தொழில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருப்பதால் கண்டிப்பாக மூன்று கோடியிலிருந்து இவருக்கு சம்பளம் இன்னும் உயரவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 159 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. சினிமா மட்டும் இல்லாமல் பிசினஸ் மற்றும் சின்ன திரையில் ராடான் நிறுவனத்தின் சீரியல்கள் தயாரிப்பது என நிறைய தொழில்களை செய்து வருகிறார்கள் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதியினர்.

Also Read:சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

Trending News