திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஒரே நாளில் ரிலீஸாகி வெள்ளிவிழா கண்ட 3 படங்கள்.. ரஜினி, கமலை பீதி அடைய வைத்த நாயகன்

Rajini, Kamal: ரஜினி, கமல் இப்போது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவர்களையே நடுங்க வைத்திருக்கிறார் ஹீரோ ஒருவர். அவருடைய படங்கள் தான் அப்போது திரையரங்குகளில் அதிக நாள் ஓடி சாதனை படைத்தது. மேலும் அவர் முன்னணி ஹீரோவாக வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் காலத்தினால் அவரது நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆனாலும் இப்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது 90களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் தான் மைக் மோகன்.

Also Read : பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பெரும்பாலும் இவரது படத்தில் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறும். இந்நிலையில் அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் மோகன் கால்ஷுட்டுக்காக காத்திருந்தனர். அந்த அளவுக்கு பிசியான ஒரு நடிகராக இருந்தார். அதுவும் 1984 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் மோகன் நடித்திருந்தார்.

இன்னும் குறிப்பாக ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி எல்லாமே வெள்ளிவிழா கண்டது. அதாவது 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மோகன், ஊர்வசி மற்றும் பல நடிப்பில் ஜெயகாந்தன் இயக்கத்தில் ஓ மானே மானே என்ற படம் வெளியானது. மோகனின் மற்றொரு படமான ஓசை படமும் வெளியானது.

Also Read : ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நளினி நடித்து அசத்தியிருப்பார். மேலும் இதே நாளில் மூன்றாவது படமாக கோவை தம்பி இயக்கத்தில் உன்னை நான் சந்தித்தேன் என்ற படமும் வெளியானது. இவ்வாறு ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானாலும் இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் வெற்றி பெறும் என விநியோகஸ்தர்கள் நம்பினார்கள்.

ஆனால் இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூலை அள்ளி தந்தது. இதைப் பார்த்து அப்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் பீதி அடைந்திருந்தார்கள். மேலும் மோகன் முன்னணி நடிகராக வருவார் என எதிர்பார்த்த சமயத்தில் அவருடைய டப்பிங் ஆர்டிஸ்ட் உடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கதை தேர்வில் சொதப்பியதால் காணாமல் போய்விட்டார். இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Also Read : 90ஸ் கிட்ஸை கதி கலங்க வைத்த 6 பேய் படங்கள்.. ரெண்டு நாள் காய்ச்சலில் அவஸ்தப்பட வைத்த மைக் மோகன்

Trending News