ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அரசியலில் இறங்கும் விஜய்.. தண்ணி காட்ட 2 கட்சிகளை உள்ளே இழுக்கும் உதயநிதி

Actor Vijay: கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்படுவது விஜய் அரசியல் நுழைவு பற்றி தான். எல்லோருக்குமே வெளிப்படையாக தளபதி அரசியலுக்கு வர உள்ள விஷயம் தெரிந்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல் தனது முதல் செயல்பாடாக மாணவர்களுக்கு விஜய் உதவி செய்து சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சியாக இருப்பது திமுக மற்றும் அதிமுக தான். இதில் திமுகவுக்கு வலுவான கூட்டணி இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதால் சற்று பயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் திமுகவிலிருந்து முக்கிய கட்சி ஒன்று விலக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : லியோ படப்பிடிப்பில் கோபத்துடன் வெளியேறிய விஜய்.. பாவம் படக்குழு ஆசைப்பட்டு கேட்டதால் வந்த விளைவு.!

இந்த சூழலில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் விஜய் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இப்போதிலிருந்து திமுகவில் இரண்டு கட்சிகளை நினைத்துக் கொள்ள செயல்பட்டு வருகிறார்களாம்.

அதாவது கமலின் மக்கள் நீதி மய்யம் இதுவரை தனித்துப் போட்டியிட்டு வந்தது. ஆனால் விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிட்டது. அதன் பிறகு இந்தியன் 2 சிக்கலையும் உதயநிதி தலையிட்டு தீர்ந்து வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஷின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் கலந்து கொண்டார்.

Also Read : ஆள் அட்ரஸை தெரியாமல் போன விஜய், அஜித் பட ஹீரோயின்.. சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லக்கி சாம்

இதன் மூலம் திமுகவின் கூட்டணியை வலு சேர்க்க கமல் இதில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் திமுகவுடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் பாஜக தனது கூட்டணி கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தினர். இதில் தேதிமுகவிற்கு அழைப்பு போகவில்லை.

மேலும் பாஜக தேதிமுக கட்சியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்ற நிலை தான் இப்போது இருக்கிறது. அதோடு மட்டுமின்றி அதிமுகவுடன் இணைய இக்கட்சிக்கு விருப்பம் இல்லையாம். எனவே திமுகவுடன் தேதிமுக கூட்டணி போட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விஜய்க்கு தண்ணீர் காட்ட மக்கள் நீதி மையம் மற்றும் தேதிமுக கட்சிகள் திமுகவில் இணைய இருக்கிறதாம். மேலும் இதே கூட்டணியில் தான் சட்டமன்ற தேர்தலும் நடக்கும் என கூறப்படுகிறது.

Also Read : 5 இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஜித்.. வந்த பாதையை மறந்து விஜய்க்கு கூஜா தூக்கும் எஸ்ஜே சூர்யா

- Advertisement -spot_img

Trending News