சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கோமாவில் இருந்து வெளிவரும் அப்பத்தாவின் ட்விஸ்ட் ஆன மறுபக்கம்.. சைடு கேப்பில் கிடாய் வெட்டிய ஜீவானந்தம்

Ethirneechal Serial: தற்போது அனைத்து சீரியல்களுக்கும் சிம்ம சொப்பனமாக மக்களின் பார்வையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தான். இதை இன்னும் விறுவிறுப்பாக்குவதற்கு ஜீவானந்தம் என்ற ஒரு கேரக்டர் உள்ளே நுழைந்து இருக்கிறது. தற்போது வரை இவர் புரியாத புதிராக தான் இருந்து வருகிறார்.

இவர் யார், இவருக்கு எப்படி குணசேகரன் வீட்டில் நடந்த எல்லா விஷயமும் தெரிகிறது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கான ஒரு தகவல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். அதாவது ஜீவானந்தத்திற்கும் அப்பத்தாவிற்கும் தான் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அது என்னவென்றால் அப்பத்தா ஒரு மாதம் கிராமத்தில் வேலை இருப்பதாக சென்று இருந்தார்.

Also read: பத்தே நாளில் ஜீவானந்தத்தின் சோலியை முடிக்கும் குணசேகரன்.. சைக்கோ உடன் போட்ட கூட்டணி

அங்கே தான் ஜீவானந்தத்தை கிராமத்தின் மக்கள் மூலம் சந்தித்திருக்கிறார். அதாவது கிராம மக்கள் இவரை ஆகோ ஓஹோ என்று புகழாரம் சூடி இருக்கிறார்கள். இதை கேட்ட அப்பத்தா, ஜீவானந்தம் ரொம்ப நல்லவர் என்று நம்பி, குணசேகரனை பற்றியும் அவர் வீட்டில் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

ஜீவானந்தம் இதையெல்லாம் நோட் பண்ணிக்கொண்டு அப்பத்தா தற்போது கோமா ஸ்டேஜில் இருப்பதை தெரிந்து கொண்டு சைடு கேப்பில் கிடாய் வெட்டி விட்டு போயிட்டார். இனி அப்பத்தா கண் விழித்துப் பார்க்கும் பொழுது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஜீவானந்தம் தற்போது சொத்தை பிடுங்கி விட்டார்கள் என்று அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் முதற்கொண்டும் தவறாக புரிந்து இருக்கிறார்கள்.

Also read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

ஆனால் ஜீவானந்தம் அதை செய்யப் போவதில்லை. அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி அந்த சொத்து மருமகளிடம் தான் கண்டிப்பாக போய் சேர போகிறது. ஒரு முறை நந்தினி பேசும்போது ஜீவானந்தம் நல்லவராக இருந்தால் சொத்து அனைத்தையும் ஜனனி பெயரில் தானே எழுதி இருக்கணும், ஏன் அவர் பெயரில் வாங்கிக் கொண்டார் என்று சொல்லி இருப்பார். ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

அப்படி நந்தினி சொன்ன மாதிரி ஜனனி பெயரிலோ அல்லது அந்த வீட்டில் மருமகள் பெயரில் மாற்றியிருந்தால், கண்டிப்பாக குணசேகரன் ஏதாவது தில்லாலங்கடி வேலையை பார்த்து அனைத்தையும் அபகரித்து இருப்பார். அதனாலதான் தந்திரமாக ஜீவானந்தம் அவர் பெயரில் மாற்றிக் கொண்டார். அந்த வகையில் தற்போது மருமகள்கள் அனைவரும் சொந்த காலில் நின்னு ஜெயித்து வருகிறார்கள்.

Also read: குணசேகரன் வீட்டு மருமகள்கள் வாடிவாசல் தாண்டி வந்தாச்சு.. இனி ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட்க்கு பஞ்சமே இருக்காது

- Advertisement -

Trending News