செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

செல்வராகவனிடம் அடி வாங்கிய 5 நடிகைகள்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

Selvaragavan: பொதுவாக இயக்குனர்கள் எதிர்பார்த்த மாதிரியான நடிப்பு நடிகர்களிடம் இருந்து வரவில்லை என்றால் கோபப்படுவதுண்டு. அதிலும் ஹீரோ ஹீரோயின் என்ற பாகுபாடு இல்லாமல் அடி வெளுத்து வாங்கும் சில இயக்குனர்களும் இருக்கிறார்கள். அதில் பாலாவை தான் சைக்கோ இயக்குனர் என்று பலரும் கூறியதுண்டு.

ஆனால் இயக்குனர் செல்வராகவனுக்கு கோபம் வந்தால் கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்து வீசி எறிந்து விடுவாராம். அப்படி இவரிடம் அடி வாங்கிய பல நடிகைகள் இருக்கின்றனர். ஒருமுறை ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீமாசென், ஆண்ட்ரியா இருவரும் நடித்தது இவருக்கு பிடிக்கவில்லையாம்.

Also read: செல்வராகவனை காலி பண்ணிய 5 படங்கள்.. இலக்கே இல்லாமல் மொத்த கஜானாவை காலி பண்ணிய படம்

அவர் எதிர்பார்த்தது போல் நடிப்பு வரவில்லை என்பதால் கையில் இருந்த மைக்கை அவர்கள் மேல் செல்வராகவன் தூக்கி போட்டாராம். அது மட்டுமல்லாமல் ஆண்ட்ரியா நிறைய முறை சரியாக நடிக்கவில்லை என்று அடிவாங்கி இருக்கிறார். அந்த அளவுக்கு செல்வராகவன் மிகவும் கோபப்படுவாராம்.

அதனாலேயே பலரும் பயந்து பயந்து நடிப்பார்கள் என பல பிரபலங்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டே இதனால் ரணகளமாக இருக்குமாம். அந்த வகையில் ஆண்ட்ரியா அவரிடம் வாங்கிய அடிகளால் தான் இன்று ஒரு திறமையான நடிகை என்று பெயர் எடுத்து வருகிறார்.

Also read: அதிரடியாக தொடங்கும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் படம்.. எக்ஸ் பொண்டாட்டி இருந்த இடத்துல இந்த நடிகையா.?

இவரைப் போலவே துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் நிறைய திட்டுக்களும், அடிகளும் வாங்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து சோனியா அகர்வால், மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமான ரிச்சா என சில நடிகைகளும் இவரிடம் திட்டு அடி வாங்கி தான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்த லிஸ்டில் தனுஷும் இருப்பது தான் ஆச்சரியம். காதல் கொண்டேன் படப்பிடிப்பின் போது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்று இவர் தன் அண்ணனிடம் அறை வாங்கியிருக்கிறார். இப்படி செல்வராகவன் ரொம்பவும் கடுமையாக நடந்து கொண்டாலும் இவரிடம் அடி வாங்கிய நடிகைகள் திறமையானவர்கள் என்று பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read: 7/ஜி ரெயின்போ காலனி-2 படப்பிடிப்பை ஆரம்பித்த செல்வராகவன்.. கதாநாயகி விஷயத்தில் சொதப்பிட்டாரே!

Trending News