திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உங்களுக்கு ராசியே இல்ல என ஒதுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்.. வேதனையுடன் அவரே சொன்ன விஷயம்

Keerthi Suresh: சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்தது. இதனால் சினிமாவில் கீர்த்தி சுரேஷால் நிலைத்து நிற்க முடியுமா என்ற பயமே வந்து விட்டதாம். ஏனென்றால் ராசி இல்லாத நடிகை என இவர் மீது முத்திரை குத்தப்பட்டிருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வி அடைந்து விடும் அல்லது பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாம். ஆனால் அந்த நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்றியது ஒரு படம் என்று சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கூறி இருக்கிறார். அதாவது இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது.

Also Read : அப்பா வயது நடிகரிடம் மேடையில் அநாகரிகமாக கட்டிப்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. வாய்ப்பு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா!

இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக போலா சங்கர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் அஜித் மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் போலா சங்கர். தற்சமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் தடபுடலாக நடந்து வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கு அடுத்தும் கைவசம் எக்கச்சக்க படங்களை கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கிறார். அதன்படி அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். விரைவில் இந்த படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : மாமன்னனில் தண்டத்துக்கு வந்து போன கீர்த்தி சுரேஷ்.. வசனமே இல்லாமல் ஸ்கோர் செய்த கேரக்டர்!

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய போது தன்னை ராசியில்லாத நடிகை என தயாரிப்பாளர்கள் நம்பிய போது தனக்கு கை கொடுத்தது ரஜினி முருகன் படம் தான். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனது சினிமா வாழ்க்கையே முடியும் என்ற நிலையில் இருந்த போது இப்படம் காப்பாற்றியது.

அதன் பிறகு அண்ணாத்த படத்தில் நடித்ததை தொடர்ந்து சில தோல்வி படங்களை கீர்த்தி சுரேஷ் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது மாமன்னன் படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் போலா சங்கர் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறாராம்.

Also Read : நான் தான் நம்பர் ஒன் என தலையில் கொம்போடு அலைந்த நடிகை.. அழுது புலம்ப வைத்த கீர்த்தி சுரேஷ்

Trending News