வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

யாருமே கண்டுக்காத ராதிகாவின் 45 ஆண்டு கலை பயணம்.. மனுஷி இவ்வளவு சாதனை செஞ்சிருக்காங்களா!

Actress Radhika: நடிகை ராதிகா, விருப்பமே இல்லாமல் சினிமாவிற்குள் வந்து இன்று தன்னுடைய வெற்றிகரமான 45 வது ஆண்டு கடந்து சாதனை படைத்திருக்கிறார். ராதிகா சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகி இருக்கின்ற நிலையில், அவர் சினிமாவில் செய்த சாதனைகள் என்பது ரொம்பவே அதிகம். பன்முகத்திறமை கொண்ட இந்த நாயகி நடிக வேள் எம் ஆர் ராதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகாவுக்கு மாடர்ன் டிரஸ் போட்டு ஹீரோக்களுடன் ஆடவும் தெரியும், இழுத்துச் செருகிய புடவை, மஞ்சள் பூசிய முகம் என கிராமத்து பெண்ணாகவும் வாழ தெரியும். அதே நேரத்தில் கோவமான வில்லத்தனத்தால் எதிரே இருப்பவர்களை உருட்டி மிரட்டி நடிக்கவும் தெரியும். பாசமான அம்மாவாக, தங்கையாக அன்பில் குழைந்து நிற்கவும் தெரியும்.

Also Read:ஒத்த கதாபாத்திரத்தில் பேச வைத்த நடிகர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. டான்சிங் ரோஸ் போல தள்ளாடும் 6 நடிகர்கள்

எந்த கேரக்டர் கொடுத்தாலும் ராதிகா அதில் நின்று பேசி விடுவார். ஊர்காவலன் படத்தில் ரஜினியை உருகி உருகி காதலிக்கும் காதலியாக இருக்கட்டும், ஜீன்ஸ் படத்தில் நாசரை தாலியை காட்டி மிரட்டும் சுந்தராம்பாளாக இருக்கட்டும், கிழக்கு சீமையிலே படத்தில் கணவனுக்கும், அண்ணனுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் பாசக்காரி தங்கை விருமாயியாக இருக்கட்டும் அத்தனையிலும் கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

ஒரு நடிகையாக மட்டும் தன்னுடைய வட்டத்தை பொறுக்கிக் கொள்ளவில்லை நடிகை ராதிகா. தயாரிப்பாளராகவும் ஜெயித்து காட்டினார். இன்று நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்து நடிப்பதற்கு மிக முக்கிய காரணமே இவர்தான். இவர் தயாரித்து நடித்த சித்தி, அண்ணாமலை போன்ற நாடகங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நேயர்களையும் கட்டி வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க 100 பேரு ஆனா இந்த ஒரு மனுஷனை தொடல ஏன்.? நடிக்கணும் ஆண்டவரே!

மேலும் சின்ன திரையில் பல வெளி மாநில நிகழ்ச்சிகளுக்கு சரிசமமாக கோடீஸ்வரன், தங்கவேட்டை போன்ற நிறைய நிகழ்ச்சிகளை கொண்டு வந்த ராதிகா, முதன்முறையாக சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி நெடுந்தொடரையும் தயாரித்தார். போதும் போதும் என்று ஜெயித்துவிட்ட இந்த நாயகி தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தெறி படத்தில் வரும் மாடன் அம்மா, தங்க மகன் படத்தில் வரும் மிடில் கிளாஸ் அம்மா, சகுனி படத்தில் வரும் அரசியல்வாதி, தங்கதுரை படத்தில் வரும் கிராமத்து அம்மா என தற்போதும் தன்னுடைய நடிப்பில் மிளிர்ந்து வரும் ராதிகாவின் இந்த 45 ஆண்டு கால சினிமா பயணம் ஏன் சினிமா பிரபலங்களால் பெரிதாக பேசப்படவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

Also Read:ரொம்ப வயலன்ஸ் என பிரச்சனை வந்த 6 படங்கள்.. ஜெயிலரை விட எண்பதுகளில் வன்முறையாக வந்த கொடூர மூவி

- Advertisement -spot_img

Trending News