Cast Based Tamil Movies: சமீபத்தில் தமிழகத்தின் தென் மாவட்டமான நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே நடந்த சாதிச் சண்டை ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சினிமா பிரபலங்களிலிருந்து, அரசியல்வாதிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களிடையே இப்படி ஒரு பிரச்சனை எழுந்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தின் மீது பயம் வரும் அளவுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் ஒருவர் மீடியாவிடம் பேசிய பொழுது இது போன்ற பிரச்சினைகளுக்கு சமீபத்தில் வெளியான படங்கள் தான் காரணம் என்பது போல் பேசி இருக்கிறார். மறந்து கிடந்த சாதிய வன்மத்தை இது போன்ற படங்கள் மீண்டும் ஞாபகப்படுத்துவதால் தான் மாணவர்களுக்கிடையே இந்த பிரச்சனை எழுந்திருப்பதாக ரொம்பவும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார் அந்த இயக்குனர்.
Also Read:கோடிகளை கொட்டும் நிறுவனங்கள்.. பா ரஞ்சித்தை நம்பி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்
கனவே கலையாதே மற்றும் மகிழ்ச்சி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் கௌதமன். இவர் படங்களை இயக்குவதோடு, நிறைய சமூக கருத்துக்களை பற்றியும் பேசக்கூடியவர். இவர் தன்னுடைய பேட்டியில் சமீப காலமாக இரண்டு இயக்குனர்கள் திரைப்படங்களில் சாதிய வன்மத்தை பற்றி காட்டுவதால் தான் இது போன்ற பிரச்சினைகள் தமிழ்நாட்டில் எழுந்து வருகின்றன என்று சொல்லி இருக்கிறார்.
சாதி படங்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போய்விடுகிறீர்கள். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் சமுதாயம் தான். சமீபத்தில் குறிப்பிட்ட இரண்டு இயக்குனர்களால் இது போன்ற படங்கள் எடுக்கப்படுவது தான் இந்த பிரச்சனைகள் அத்தனைக்கும் காரணம் என கௌதமன் சொல்லி இருக்கிறார்.
இளம் சமுதாயத்துக்கு கஞ்சா செடிகளை தேடிக் கொண்டு போய் காட்டாதீர்கள், அதற்கு பதிலாக மூலிகைச் செடிகளை பற்றி சொல்லிக் கொடுங்கள். இந்த இரண்டு இயக்குனர்கள் மட்டுமல்ல சாதிய வன்மத்தோடு சினிமாவில் இருக்கும் பல இயக்குனர்களும் இதன் பின் திருந்த வேண்டும். நானும் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதையாக எடுத்து இருக்கிறேன். ஆனால் நான் எந்த இடத்திலும் சாதியை குறிப்பிட்டதில்லை என்று சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் கௌதமன், மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் இருவரையும் தான் இந்த பேட்டியில் சாடி இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் அதிக ஹைப் ஆனது. மேலும் அந்த படத்தில் வரும் ரத்தினவேல் கேரக்டரை பல சாதி அமைப்புகளும் கொண்டாடி வந்தனர். அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால் தற்போது இந்த படங்களின் மீது அத்தனை குற்றச்சாட்டும் விழுந்து விட்டது.
Also Read:லோகேஷை பார்த்தாவது திருந்துங்க.. பா ரஞ்சித், மாரி செல்வராஜுக்கு கிடைத்த சவுக்கடி