Director Nelson: பல அவமானங்களையும், நிராகரிப்புகளையும் தாண்டி தற்போது வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் நெல்சன். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்கள் எதார்த்தமான கதையுடன் வெளிவந்து மக்களை ரசித்துப் பார்க்க வைத்தது. இதன் விளைவாக விஜய்யை வைத்து மாஸாக படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்து பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்புடன் எடுத்தார்.
ஆனால் ஆரம்பத்தில் எடுத்த இரண்டு படங்களும் நெல்சனின் ஈஷ்டபடி அவர் போக்கிலேயே போய் எடுக்கப்பட்ட காட்சிகள். அதனால் தான் என்னமோ அந்த இரண்டு படங்களுமே வெற்றியாக பார்க்கப்பட்டது. அடுத்தபடியாக விஜய்யுடன் இணைந்ததும் ரொம்பவே பதட்டம் ஆகிவிட்டார். மேலும் அந்த நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சினிமா மற்றும் திரையரங்கம்.
இது போன்ற நிறைய விஷயங்கள் அவரை அதிகமாக குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. சமீபத்தில் நெல்சன் அளித்த பேட்டியில் பீஸ்ட் படத்தின் தோல்விக்கான காரணத்தை கூறியிருக்கிறார்.அதாவது அந்த படத்தை நாங்கள் இந்த நேரத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்று ஒரு தேதியை முடிவு பண்ணி எடுத்ததுதான் மிகப்பெரிய தவறாக போய்விட்டது.
இன்னும் ஆறு ஏழு மாதங்கள் எனக்கு அவகாசம் கொடுத்திருந்தால் இந்த படத்தை தெளிவாக நிறைய விஷயங்களை சேகரித்து இன்னும் அதிகமாகவே சொல்லி இருக்க முடியும். என்னால் சுதந்திரமாக நினைத்தபடி வேலையே பண்ண முடியாமல் போய்விட்டது. மேலும் இப்படத்தில் ரொம்பவே பதட்டத்துடனும் அவசர அவசரமாக முடித்ததால் தான் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆனால் என் மேல் நம்பிக்கை வைத்து ரஜினி எனக்கு இந்த வாய்ப்பை ஜெயிலர் படத்தின் மூலம் கொடுத்தார். அத்துடன் எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்து இயக்குனராக உங்கள் வேலை எதுவோ அதை நீங்கள் செய்தால் போதும் நான் தலையிட மாட்டேன். நீங்கள் என்ன சொல்கிறார்களோ அதை நான் செய்வேன் என்று என் மேலே நம்பிக்கை வைத்து முழு பொறுப்பையும் என்னிடமே ஒப்படைத்து விட்டார்.
அதனால் தான் நான் நினைத்தபடி ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது என்று நெல்சன் ஜெயிலர் படத்திற்கான வெற்றியையும், பீஸ்ட் படத்தின் தோல்விக்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். இருந்தபொழுதும் பீஸ்ட் படம் இந்த அளவுக்கு மோசமாக தோற்றத்திற்கு ஏன் என்று தெரியாமல் இப்பொழுது வரை நண்பர்களிடம் மறைமுகமாக புலம்பித் தவித்து வருகிறார்.