புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

ஆர் ஆர் ஆர்- ஐ மனதில் வைத்துக் கொண்டு கங்கணம் கட்டித் திரியும் கமல்.. முறியடிக்க எந்த லெவலுக்கும் போக ரெடியாம்

Actor Kamal: ராஜ் மவுலி இயக்கத்தில் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான படம் தான் ஆர் ஆர் ஆர். ஆஸ்கர் லெவலில் தட்டி தூக்கிய இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து இப்படத்தை மனதில் கொண்டு தற்பொழுது கமல் முறியடிக்க கங்கணம் தீட்டி வருகிறார்.

அதிக பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகும் படம் தான் இந்தியன் 2. இப்படத்தின் எதிர்பார்ப்பு, பெருதளவில் இருக்கும் நிலையில், அதை ஆஸ்கர் லெவலுக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான விஷயம் படத்தில் இருப்பதால் தைரியமாக முடிவெடுத்துள்ளார் கமல்.

Also Read: எல்லாத்துக்கும் எங்க தயவு வேணும் சாமி.. வாரிசு போல் லியோவையும் கண்ணசைவில் கண்ட்ரோல் பண்ணும் ரெட் ஜெயண்ட்

இதை தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி ஷங்கரும், கமலும் இதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் தன் முழு முயற்சியை போட்டு வரும் கமல் இந்த முறை கண்டிப்பாக எப்படியாவது ஆஸ்கரை வென்றாக வேண்டும் என்ற அமைப்பில் இருந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவரது கவனம் முழுக்க முழுக்க ஆர் ஆர் ஆர் படத்தை கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை மனதில் கொண்டு கங்கணம் கட்டி வேலை பார்த்து வருகிறார். அதிலும் ஷங்கர் படங்கள் என்றாலே, சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு அதிக பட்ஜெட்டில் படம் உருவாக்கப்படும்.

Also Read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட சந்தானம்.. பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பொழப்பு சிரிப்பா சிரிக்குது

மேலும் இப்படம் குறித்து திட்டம் தீட்டி வரும் இவர்கள் இப்படத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என துணிந்து செயல்பட்டு வருகிறார்களாம். எப்படியும் போட்ட பணத்தை மீட்டு விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல வருடம் கழித்து இந்த முறை ஆஸ்கர் வெல்வது உறுதி என கமல் பேசி வருகிறார். இவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாய், ஷங்கரும் பக்கத்துணையாய் இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாட இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புலி வாலை பிடித்தது போல் சந்தானத்திற்கு வந்த கஷ்டம்.. நாலா பக்கமும் சூழ்ந்து கொண்ட கெட்ட நேரம்

- Advertisement -spot_img

Trending News