Jailer: நேற்றைய தினம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன், அனிருத், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஜெயிலர் புகைப்படங்கள் இணையம் முழுக்க பரவி இருக்கிறது.
ஆனால் ரஜினி மற்றும் பிற பிரபலங்கள் பேசிய வீடியோ எதுவுமே வெளியாகவில்லை. ஏனென்றால் சன் பிக்சர்ஸ் இந்த நிகழ்ச்சியின் வீடியோ எதுவும் வெளியிடக் கூடாது என காப்பி ரைட் வாங்கி உள்ளது. இதன் காரணமாக ஒளி வடிவில் ஜெயிலர் ஆடியோ லாஞ்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Also Read : டிஆர்பி இல்லாததால் பிரபல சீரியலை ஊத்தி முடிய சன் டிவி.. எதிர்நீச்சல் போல புத்தம் புது என்ட்ரி
காலதாமதம் எப்போதுமே ஆர்வத்தை குறைத்து விடும் என்பதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜூலை 30ஆம் தேதி மாலை ஜெயிலர் பட ஆடியோ லான்ச் வெளியாக இருக்கிறது. மேலும் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரால் எப்போதுமே டிஆர்பி யில் முதல் ரேட்டிங் இந்த தொலைக்காட்சி சமீப காலமாக பெற்று வருகிறது.
இந்த சூழலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சன் டிவி டிஆர்பி ஜெட் வேகத்தில் ஏற இருக்கிறது. கண்டிப்பாக சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ரேட்டிங் பெரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டிஆர்பி யில் விஜய் டிவி பின் தங்கி விட்டது. ஞாயிற்றுக்கிழமை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் டிஆர்பியை ஏற்றி வந்தது.
Also Read : அதகளம் பண்ண வரும் முத்துவேல் பாண்டியன்.. ஜெயிலர் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்
ஆனால் அதற்கும் தற்போது ஆப்பு வைக்கும் படியாக ஜெயிலர் ஆடியோ லான்ச் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆகையால் இந்த வாரம் டிஆர்பியில் விஜய் டிவி பெருத்த அடி வாங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தால் கண்டிப்பாக நல்ல லாபத்தை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அப்போது டிஜிட்டல் மற்றும் ஆடியோ ரைட்ஸ் மூலம் பல கோடிகளை பார்த்துள்ளது. இந்த சூழலில் சன் டிவியில் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஒளிபரப்பி பெருத்த லாபம் பார்க்க இருக்கிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் தாண்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இவ்விழாவை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Also Read : விஜய்யை தாக்கி பேசிய ஒட்டு மொத்த கூட்டம்.. அவர் இல்லனா ஜெயிலர் படமே இல்லை என சீக்ரெட்டை உடைத்த பிரபலம்