அப்பாஸ் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் நடந்திருக்கிறதா.. லட்டு போல் கிடைத்த 5 வாய்ப்புகளை தடுத்து நிறுத்திய துரோகி

Actor  Abbas: நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக பலம் வந்தவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்தியா திரும்பியிருக்கும் அப்பாஸ் நிறைய மீடியாக்களில் தன்னுடைய கடந்த கால சினிமா வாழ்க்கை பற்றி பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான ஐந்து படங்களின் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் இவர். வாய்ப்புகள் தவறி போனதற்கான காரணத்தை இவர் சொல்லும் பொழுது, எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் இந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் கண்டிப்பாக அப்பாஸ் மிகப்பெரிய முன்னணி ஹீரோவாக வலம் வந்திருப்பார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜீன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் கேரக்டரில் நடிக்க முதலில் அப்பாசுக்கு தான் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் படத்திற்காக அணுகும் பொழுது அப்பாஸிடம் கால் சீட் இல்லை என்று சொல்லி அவருடைய மேனேஜர் மறுத்துவிட்டாராம். இதேபோன்று நடிகர் ஷாம் ஹீரோவாக அறிமுகமான 12 B படத்திலும் முதலில் ஹீரோவாக நடிப்பதற்கு அப்பாஸுக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஸ்ரீகாந்த் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ரோஜா கூட்டம் திரைப்படத்தின் ஹீரோ வாய்ப்பு நடிகர் அப்பாஸுக்கு கிடைக்க வேண்டியதுதானாம். இறுதி நேரத்தில் புதுமுக ஹீரோ தான் வேண்டும் என சொல்லி அப்பாஸை நிராகரித்து விட்டார்களாம். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படமான பஞ்சதந்திரம் படத்தின் வாய்ப்பும் இவர் தவறவிட்டது தான்.

தளபதி விஜய்க்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. விஜய்யின் சினிமா கேரியரும் மற்றொரு பரிணாமத்தை அடைந்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அப்பாஸ் தானாம் . ஆனால் அவரை படக்குழு அணுகிய போது அவருடைய மேனேஜர் கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

ஜீன்ஸ் மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற இரண்டு ஹிட் படங்களை அப்பாஸ் தவறவிட்டதற்கு முழு காரணமாக இருந்தது அவருடைய மேனேஜர் தான். நல்ல கதைகள் அவரை தேடி வந்த பொழுது கால்ஷீட் இல்லை என்று சொல்லி அந்த வாய்ப்புகளை தட்டி விட்டிருக்கிறார். தற்பொழுது அப்பாஸ் தன்னுடைய மேனேஜர் தனக்கு செய்த துரோகத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார்.