Actor Rajinikanth: நெல்சன் மற்றும் ரஜினியின் காம்பினேஷனில் உருவாக்கி வந்த ஜெயிலர் படம் எந்த அளவுக்கு இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடையாத விதமாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அத்துடன் உலக அளவிலும் ஜெயிலர் படம் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை செய்திருக்கிறது.
அந்த வகையில் ரஜினியின் மற்ற படங்களை விட இந்த படம் அவருக்கு மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இதுவரை வெளிவந்த மற்ற படங்களை விட ஜெயிலர் படம் வசூல் அளவில் அதிக இலாபத்தை பார்த்து விட்டது. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் ரஜினியின் நடிப்பு தான் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வெறும் நெல்சன் படமாக மட்டும் இருந்தால் வந்த முதல் நாளிலே இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். இந்த படத்தில் ரஜினி நடித்ததால் தான் பட்டி தொட்டி எல்லாம் பேசும்படியாக அமைந்து வருகிறது என்றும் பலரும் அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
ஆனாலும் வசூல் அளவில் என்னதான் சாதனை செய்திருந்தாலும் தமிழ்நாட்டின் முதல் நாள் வசூல் 25 கோடி மட்டுமே பெற்றிருக்கிறது.
இந்த ஒரு விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் விஜய், அஜித் படங்கள் முதல் நாளில் வசூல் கிட்டத்தட்ட 35 கோடிக்கு மேல் லாபத்தை பார்த்து விடும்.
அப்படி இருக்கும் பொழுது ரஜினி நடித்த இந்த படம் 25 கோடி மட்டும் வசூலை பெற்றிருக்கிறது. இதற்கு காரணமாக அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது தான் என்று பலரும் சொல்கிறார்கள்.
ஆனாலும் இதுதான் உண்மையான காரணம் என்று ஏற்றுக் கொள்ளப்படாத அளவிற்கு தான் ரஜினியின் ஆட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதாவது இதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரஜினி பேசிய பேச்சுக்கள் மற்றும் இவருடைய அரசியல்கள் அனைத்தும் தான் இதில் பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது அரசியல் வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தாலும், இவர் தனிப்பட்ட முறையில் அடிக்கடி பாஜக பிரமுகர்களை சந்தித்து பேசுவது பிரச்சினையாக இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடந்து கொண்ட விஷயங்களில் ரசிகர்கள் பலரும் கோபத்துடன் இருக்கிறார்கள். அந்த வகையில் இவருடைய அடுத்த படத்தின் நிலைமை இதைவிட மோசமாக போக வாய்ப்பு இருக்கிறது.