ரெண்டு வாரத்தில் இந்தியளவில் வசூலில் அலப்பறை செய்த ஜெயிலர்.. தலை சுற்ற வைக்கும் தமிழ்நாடு கலெக்ஷன்

Jailer Collection: கடந்த பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- நெல்சன் திலிப் குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரத்தை கடந்த நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்ற தகவல் புள்ளி விவரத்துடன் வெளியாகி தலை சுற்ற வைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இரண்டே வாரத்தில் ஜெயிலர் படம் மொத்தமாக 200 கோடியை வசூலித்து அலப்பறை செய்துள்ளது. உலக அளவிலும் ஆரம்பத்தில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலருக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், முதல் வார இறுதியில் மட்டும் உலக அளவில் 450.80 கோடியை வசூலித்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக 2-வது வாரத்தின் முதல் நாளில் 19.37 கோடியையும், இரண்டாவது நாளில் 17.22 கோடியையும், மூன்றாவது நாளில் 26.86 கோடியையும், நான்காவது நாளில் 29.71 கோடியையும் வசூலித்தது. தொடர்ச்சியாக இரண்டாவது வாரத்தின் ஆறாவது நாளில் 9.63 கோடியையும், ஏழாவது நாளில் 8.85 கோடியையும் வவசூலித்தது.

மொத்தமாக இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படம் 574.98 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 200 கோடியை வெறும் 14 நாளில் குவித்தது சாதனைக்குரிய விஷயமாகும். நாளுக்கு நாள் ஜெயிலர் படத்தின் வசூல் சோடை போகாமல் இருப்பதால் இன்னும் 600 கோடி, 700 கோடி என வரிசையாக படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே போகப் போகிறது.

ஜெயிலர் படம் வெளியாகி இரண்டு வாரத்தில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற இந்த புள்ளிவிபரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு வார இறுதியில் 375 கோடியை வசூலித்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதேபோலவே இப்போது இரண்டாவது வாரம் முடிவில் சன் பிக்சர்ஸ் சார்பில் ஜெயிலர் படம் எவ்வளவு வசூலித்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே இந்த வசூல் விபரத்தை நம்ப முடியும். கூடிய விரைவில் சன் பிக்சர்ஸ் இதுவரை ஜெயிலர் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.