வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரபாஸுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கமல்.. 20 நாட்களுக்கு மட்டும் வாரி வழங்கிய தயாரிப்பு நிறுவனம்

Prabhas, Kamal :  பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுவும் கடைசியாக வெளியான ஆதிபுருஷ் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்போது பிரபாஸ் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் ப்ராஜெக்ட் கே. ஏனென்றால் இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள். அதன்படி பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read : என்னது ஆதிபுருஷ் பட்ஜெட்டை வச்சு இன்னொரு ராக்கெட்டை விடலாமா? வைரல் மீம்ஸ் ஆல் உடையும் பிரபாஸ் மார்க்கெட்

மேலும் கமல் இப்போது படு பிஸியாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றொரு புறம் ப்ராஜெக்ட் கே என சுழன்று கொண்டிருக்கிறார். இதுதவிர விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தில் கமலின் சம்பளம் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவர் வாங்கிய சம்பள தொகையை தான் தற்போது கமலும் பெறுகிறாராம். அதன்படி ப்ராஜெக்ட் கே படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ் மற்றும் கமல் இருவருக்குமே தலா 150 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Also Read : கமலுக்கு உயிர் பயத்தை காட்டிய ரஜினி.. மனநோய் முத்தியவன் கூட மூணு நாள்கத்தி சண்டை போட முடியாது

இதில் என்ன ஆச்சரியம் என்றால் ப்ராஜெக்ட் கே படத்தில் கமலின் கால்ஷீட் வெறும் 20 நாட்கள் தான். அதற்கே 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கொடுக்க காரணம் அவருடைய மார்க்கெட் இப்போது உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஏனென்றால் விக்ரம் படத்திற்கு முன்னதாக கமலின் சம்பளம் 100 கோடியை கூட தொடவில்லை.

ஆனால் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கமலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது. இதன் காரணமாக இப்போது கமலின் சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

Also Read : ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

Trending News