Jailer Movie: ஒரு திரைப்படத்தின் முக்கியமான பகுதி என்பது இன்டர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் பிளாக் ஆகும். சினிமா தியேட்டரில் படம் பாத்து கொண்டிருக்கும் போது இடையில் விடும் பிரேக்கே இன்டர்வல் பிளாக் எனப்படும். தமிழ் சினிமாவில் இதற்கு முன்னால் இன்டர்வெல் பிளாக் என்னும் விஷயத்துக்கு பெரிதாக முக்கியத்துவமே கொடுத்தது இல்லை.
முன்பெல்லாம் இடைவேளை விடுவதற்கு ஒரு காரணம் இருந்தது அது என்னவென்றால், அப்போது இருந்த திரையரங்குகளில் சரியான ப்ரஜக்சன் வசதி எல்லாம் இல்லை. அப்போல்லாம் ரீல் அமைப்புதான் இருந்தது. அதை மாற்றுவதற்கு நேரம் தேவைப்பட்டதால் இடைவேளை விட்டனர். ஆனால் இப்போது அதெல்லாம் தேவையே இல்லை எல்லாமே டிஜிட்டல் ஆகிவிட்டன.
Also Read:4 மடங்கு சம்பளம், கிடுகிடுவென்று உயர்ந்த சூப்பர் ஸ்டார்.. ரஜினி மார்க்கெட்டை எகிற வைத்த தயாரிப்பாளர்
ஆரம்பகாலகட்டதில் சினிமா துறையில் இன்டெர்வல் பிளாக் பற்றி சரியான புரிதல் இல்லாத காரணத்தால், அதில் யாருமே கவனம் செலுத்தவில்லை. அதுபோன்ற படங்கள் மக்களின் இடையே ஆழமாக நிற்பதும் இல்லை. பிரேக்கிற்கு முன்பு ஏதாவது டிவிஸ்ட் அல்லது சஸ்பென்ஸ் இருந்தால் தான் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும்.
தற்போதைய இயக்குனர்கள் இன்டெர்வல் விடுவது பாப்கான், ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு மட்டுமே கிடையாது. ரசிகர்களை திரைப்படத்துடன் எங்கேஜ் ஆக வைத்துக் கொள்ளவும் என்று எண்ணினார்கள். திரைப்படத்தின் கதைகளங்களை ரசிகர் நடுவில் அச்சிரியமும் எதிர்பார்ப்பு உண்டாக்கும் வகையிலும் இடைவேளை விட்டால் நன்றாக இருக்கும் என்று அதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இன்டெர்வல் பிளாக்கில் டிவிஸ்ட் வைத்து வெளியான திரைப்படம் இணைந்த கைகள் ஆகும். இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பினை பெற்றது. அப்போதே இப்படத்தின் இன்டர்வல் பிளாக் சீன் செம மாஸ் ஆக இருந்தது. மேலும் ரசிகர்களிடையே ஹைப் உண்டாக்கியது.
நடிகர்கள் ராம்கி மற்றும் அருண்பாண்டியன் இணைந்து நடித்த இந்த படம் இன்று வரை ரசிகர்கள் விரும்பப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி மாஸ் கிளப்பிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சியை எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்ற அளவிற்கு இணைந்த கைகள் படத்தின் இன்டெர்வல் பிளாக் இருந்தது.
Also Read:முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்