உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், தற்போது வி எஃப் எக்ஸ் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. லைக்கா மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிரூத் இசையமைத்துள்ளார்.
இதனிடையே உலகநாயகன் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை வைத்து கல்லா கட்ட பக்கவான பிளான் போட்டு வருகிறார். கமலஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்காக தனது சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் அவர் 75 கோடி வரை சம்பளம் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் தற்போது 130 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இப்படி கமலின் மார்க்கெட் விக்ரம் படத்திற்கு பின் உயர்ந்தது தான் இவரது சம்பளம் அதிகரிக்க காரணமாக அமைந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் 500 கோடி வரை வசூலை அள்ளிக்குவித்தது.
கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்தனர். அந்த வகையில் விக்ரம் படத்திற்கு முன்பாகவே கமல் கமிட்டான இந்தியன் 2 படம் பாதியிலேயே படப்பிடிப்பு நின்ற நிலையில், உதயநிதி, லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தை ஆரம்பத்தில் எடுக்கும்போது கமலஹாசனின் மார்க்கெட் சற்று சரிவையே கண்டது. அதனடிப்படையில் அவருக்கு 30 கோடி வரை மட்டுமே அப்போது சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது கமலின் மார்க்கெட் உச்சத்தில் உள்ள நிலையில், சராசரியாக ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் கமலஹாசன் தனது சம்பளத்தை வாங்கி வருகிறார்..
ஆனால் ஏற்கனவே இந்தியன் 2 படத்துக்கான சம்பளம் பேசப்பட்ட நிலையில், இந்த சம்பளத்தை தற்போது அதிகரிக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. இந்த நிலையில், படத்தின் சில பங்குகளை தனக்கு கொடுக்குமாறு கமல் தற்போது லைக்காவிடமும், உதயநிதியிடமும் கூறியுள்ளாராம். தற்போது கமலஹாசனால் தான் இப்படம் ரிலீசாவதற்கு முன்பே 100 கோடி வரை ப்ரீ பிசினஸ் ஆகியுள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் வெளிநாட்டு உரிமத்திற்கான வசூலை கமல் டார்கெட் செய்துள்ளாராம்.