ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

1250 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் கல்லா கட்ட போகும் சன் பிக்சர்ஸ்.. எதிர்பார்ப்பை எகிற விட்டு தயாராகும் 5 படங்கள்

Sun Picture: தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் சன் பிக்சர்ஸும் ஒன்று. சமீபத்தில் இவர்களது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வசூலில் பின்னி பெடல் எடுத்தது.

இதனால் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் மும்முரம் காட்டுகிறது. அதிலும் அசால்டாக 1250 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து நான்கு தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டாரின் 171வது படம் ரஜினி ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆர்வக்கோளாறில் சன் பிக்சர்ஸ் செய்த மட்டமான வேலை.. எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியதால் தலைவலியில் ரஜினி

ஏனென்றால் ரஜினி இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போகிறார். அதுவும் தலைவர் 171 தான் அவருடைய கடைசி படம் என சொல்லப்படுகிறது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். இந்த படம் நிச்சயம் சூப்பர் ஸ்டார் சினிமா வரலாற்றில் சிறப்பு வாய்ந்த படமாக இருக்க வேண்டும் என்று இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படப்பிடிப்பும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்துடன் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஒரு படத்திற்கும், அட்லி இயக்கும் மற்றொரு படத்திற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

Also Read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

அது மட்டுமல்ல வெற்றிமாறன்- கமல் கூட்டணியில் தயாராகும் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் எடுக்க போவதாக டிஸ்கஷன் நடைபெறுகிறது. இந்த படங்களின் முழு தகவலும் இனிவரும் நாட்களில் வெளியாகும். இவ்வாறு இந்த நான்கு பெரிய தலைகளின் படங்கள் பெரும் பட்ஜெட்டில் அடுத்தடுத்து வரிசையாக தயார் செய்து சன் பிக்சர்ஸ் பல கோடிகளை கல்லா கட்ட பார்க்கின்றனர்.

அதற்கான முழு ஏற்பாடுகளும் தற்போது அறக்கப் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காக்கக்கூடிய படங்கள் என்பதால் நிச்சயம் போட்ட காசை  இரண்டு மடங்கு சன் பிக்சர்ஸ் நிச்சயம் தட்டி தூக்கி விடும்.

Also Read: ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

Trending News