திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கடைசி காட்சியில் மிரட்டி விட்ட குணசேகரன்.. அடுத்தடுத்து தொழிலதிபராக மாறும் மருமகள்கள்

Ethirneechal Serial: எத்தனை சீரியல் வந்தாலும் அனைவரது கண்ணும் முதலில் தேடுவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை தான். அந்த வகையில் தற்போது மருமகள்கள் ஒவ்வொருவரும் வெற்றி நடை போட்டு சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று மனதிற்குள் புதிதாக தைரியம் வந்துவிட்டது.

இத்தனை நாட்களாக கதிர் தான் ஓவராக துள்ளிக் கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வந்தார். தற்போது இவரை விட டபுள் மடங்காக ஞானம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த டம்மி பீசுகளை எப்படி அடக்க வேண்டும் என்று ஒவ்வொரு மருமகள்களும் சரியான யுக்தியை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

Also read: தம்பிக்காக இறங்கி வந்த புதிய குணசேகரன்.. நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்குமா எதிர்நீச்சல்

அதற்கு ஏற்ற மாதிரி தற்போது குணசேகரனின் அம்மாவும் முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்கிற மாதிரி அப்படியே மருமகள்கள் செய்யும் எல்லா விஷயத்திற்கும் சப்போர்ட் செய்து பெற்ற மகன்களிடமிருந்து பூசி மழுப்பு வருகிறார். மேலும் ஈஸ்வரிக்கு தொடர்ந்து கல்லூரியில் மோட்டிவேஷன் ஸ்பீக்கருக்கு வாய்ப்பு தேடிக்கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஈஸ்வரி சாதனையாளராக வெற்றி பெற்று வருகிறார். அப்பொழுது ஜீவானந்தம் மற்றும் அவருடைய மகள் வெண்பாவை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. பிறகு ஈஸ்வரி, தர்ஷன், ஜீவானந்தம் மற்றும் வெண்பா அனைவரும் வெளியில் சந்தித்து பேசுகிறார்கள். அப்பொழுது ஜீவானந்தம் எதார்த்தமான வாழ்க்கையை பற்றி ஈஸ்வரியின் மகனுக்கு எடுத்துரைக்கிறார்.

Also read: இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஈஸ்வரி மற்றும் தர்ஷன் வாசலில் நின்று நடந்த விஷயத்தை சொல்லும் பொழுது, வீட்டிற்குள் இருந்து ஞானம் மற்றும் கதிர் வெளியே வருகிறார்கள். அந்த நேரத்தில் அப்பத்தா, தர்ஷனிடம் இன்னும் காலேஜ் பீஸ் கட்டலையா என்று கேட்க, அதற்கு தர்ஷன் அந்த ஆளு பணத்துல எனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொல்கிறார்.

உடனே கதிர் என்ன அந்த ஆளென்று மரியாதை இல்லாமல் பேசுகிற என்று கோபத்தை காட்டுகிறார். உடனே ஈஸ்வரி என் பையனிடம் கேள்வி கேட்க எவனுக்கும் இங்கே உரிமை இல்லை என்று சொல்கிறார். அப்பொழுது யாருமே எதிர்பார்க்காத படி குணசேகரன் மாடியில் இருந்து பார்வையாலே மிரட்டி விடுகிறார். அதாவது இவர் இல்லாத குறையை தீர்ப்பதற்காக எதிர்நீச்சல் டீம் செய்த அற்புதமான வேலை என்றே சொல்லலாம்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

- Advertisement -

Trending News