23 வருடங்களில் மொத்தம் 13 படங்கள்.. இதில் 7 படங்கள் சூப்பர் மெகா ஹிட் கொடுத்த ஒரே நடிகர்.!

Top Tamil Cinema Actor: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு நடிகர் எத்தனை படங்கள் கொடுக்கிறார் என்பது முக்கியமில்லை. எத்தனை ஹிட் படங்கள் கொடுக்கிறார்கள் என்பது தான் ரொம்பவும் முக்கியம். இதை நன்றாக புரிந்து கொண்ட நடிகர் ஒருவர், கடந்த 23 ஆண்டுகளில் 13 படங்கள் மட்டுமே கொடுத்திருந்தாலும் இன்று பாக்ஸ் ஆபிஸில் முக்கிய நாயகனாக மாறியிருக்கிறார்.

இந்திய சினிமா நடிகர்கள் யாருமே பண்ணாத சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசால்டாக செய்து கொண்டிருக்கிறார். அவர் இளம் வயதில் முன்னணி ஹீரோவாக இருக்கும்போது மற்ற மொழிகளில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் எல்லோருமே இப்போது ஒன்று சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்கள், இல்லை என்றால் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக மாறிவிட்டார்கள். ரஜினி மட்டுமே இன்றும் ஹீரோ என்னும் இடத்திலேயே இருக்கிறார்.

72 வயதிலும் ஹீரோவாக 650 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. ஆரம்ப காலங்களில் ரஜினி நிற்க கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாளில், ஐந்து கால்ஷீட் கொடுத்து நடிக்கும் அளவிற்கு பிசியான நடிகராக இருந்தார். அதன் பின்னர் அந்த எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொண்டார்.

இப்படி மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டிலை தன் கைவசம் வைத்திருக்கும் ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. 1990களின் காலகட்டத்தில் வணிக ரீதியாக டாப் ஸ்டார் ஆக இருந்த ரஜினி, படையப்பா வெற்றிக்கு பிறகு 2000 ஆண்டு முதல் 2023 வரை பெற்ற வெற்றி ரொம்பவும் முக்கியமானது.

2000 வருடத்திற்கு பிறகு ரஜினி மொத்தம் 13 படங்கள் தான் நடித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு பாபா படத்தின் தோல்விக்கு பிறகு, 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்னும் மாபெரும் வெற்றியை கொடுத்தவர், அந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து படம் கொடுக்காமல், தனக்கான கதைகளை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்றார்.

இந்த 23 படங்களில், ஏழு படங்கள் சூப்பர் மெகா ஹிட் படங்கள். ஒவ்வொரு படமும் 200 கோடி, 350 கோடி என வசூல் சாதனை செய்திருக்கிறது. அதிலும் ரஜினியின் சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மொத்தம் 800 கோடியை தொட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வயதில் இப்படி ஒரு சாதனையை ரஜினியால் மட்டுமே செய்ய முடியும்.